Sunil Gavaskar: ‘ஒரு செஷன் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்பது பரிதாபத்துக்குரியது’-சுனில் கவாஸ்கர் கருத்து
Jun 11, 2023, 07:59 PM IST
Team India: '7 விக்கெட்டுகள் கையில் வைத்துக் கொண்டு ஒரு செஷன் கூட தாக்குப் பிடக்க முடியவில்லை என்பது பரிதாபமாக இருக்கிறது'
இந்திய அணியின் மோசமான பேட்டிங் தான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து ரன்னர்-அப் ஆனது. ஆஸ்திரேலியா ஜெயித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு குறைந்தது 20 அல்லது 25 நாட்கள் தயாராக வேண்டும். ஆனால், ஐபிஎல் தொடர் முடிந்த சில நாட்களுக்குள் பயிற்சி ஆட்டங்கள் கூட இல்லாமல் விளையாட நேர்ந்தது' என்றார்.
சுனில் கவாஸ்கர் கூறுகையில், "இந்திய அணியின் மோசமான பேட்டிங் தான் இந்த தோல்விக்கு காரணம். 7 விக்கெட்டுகள் கையில் வைத்துக் கொண்டு ஒரு செஷன் கூட தாக்குப் பிடக்க முடியவில்லை என்பது பரிதாபமாக இருக்கிறது' என்றார்.
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி வென்றது. இந்த ஆண்டு இங்கிலாந்தின் ஓவலில் நடந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா வென்றது.
இந்தியாவுடனான பைனலில் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது ஆஸ்திரேலியா.
ஜூன் 7 அன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் விளையாடி ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 121.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.
அந்த இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நேற்றே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. 444 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடிய இந்தியா, கடைசி நாளில் போராடி தோல்வி அடைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில், 18 ரன்களுடன் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா 43 ரன்களிலும், புஜாரா 27 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
புஜாரா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சொதப்பினார்.
விராட் கோலி, ரஹானே ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 78 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார் கோலி.
ரஹானேவும் 46 ரன்களில் நடையைக் கட்டினார்.
ஆல்-ரவுண்டர் ஜடேஜா ரன்னின்றியும், ஸ்ரீகர் பரத் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பிற வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார்.
2வது இன்னிங்ஸில் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும் சுருட்டினர்.
டாபிக்ஸ்