தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Dc Vs Rcb: கோட்டுக்கு இந்த பக்கம் இருக்கும் ஆர்சிபி முன்னேற அரிய வாய்ப்பு! வெற்றி பாதையை தொடரும் முயற்சியில் டெல்லி

DC vs RCB: கோட்டுக்கு இந்த பக்கம் இருக்கும் ஆர்சிபி முன்னேற அரிய வாய்ப்பு! வெற்றி பாதையை தொடரும் முயற்சியில் டெல்லி

May 06, 2023, 07:20 AM IST

google News
கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி அணியிடம் தோல்வி அடையாத ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், டாப் 4 இடத்தை பிடித்து ப்ளேஆஃப் வாய்ப்பை வலுவாக்கி கொள்ளலாம். ஆனால் இந்த சீசனில் வெற்றி பாதைக்கு திரும்பியிருக்கும் டெல்லி அதை தொடர்ந்து ஆர்சிபி எதிரான மோசமான சாதனையை முறியடிக்க முயற்சி செய்யும்.
கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி அணியிடம் தோல்வி அடையாத ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், டாப் 4 இடத்தை பிடித்து ப்ளேஆஃப் வாய்ப்பை வலுவாக்கி கொள்ளலாம். ஆனால் இந்த சீசனில் வெற்றி பாதைக்கு திரும்பியிருக்கும் டெல்லி அதை தொடர்ந்து ஆர்சிபி எதிரான மோசமான சாதனையை முறியடிக்க முயற்சி செய்யும்.

கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி அணியிடம் தோல்வி அடையாத ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், டாப் 4 இடத்தை பிடித்து ப்ளேஆஃப் வாய்ப்பை வலுவாக்கி கொள்ளலாம். ஆனால் இந்த சீசனில் வெற்றி பாதைக்கு திரும்பியிருக்கும் டெல்லி அதை தொடர்ந்து ஆர்சிபி எதிரான மோசமான சாதனையை முறியடிக்க முயற்சி செய்யும்.

ஐபிஎல் 2023 தொடரின் 50வது போட்டி டெல்ல கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது போட்டியாக இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி வெற்றி பெற்றால் ஒரு இடம் முன்னேறும். ஆனால் ஆர்சிபி அணி வெற்றி பெறும் பட்சத்தில் டாப் 4 இடத்தை பிடித்து ப்ளேஆஃப் வாய்ப்பை வலுப்படுத்தி கொள்ளலாம்.

டெல்லி அணியை பெறுத்தவரை இந்த சீசன் மிகவும் மோசமாகவே அமைந்துள்ளது. பவர்ப்ளே பேட்டிங் சுத்தமாக எடுபடாதபோதிலும் பவர்ப்ளே பெளிலிங்கில், ஆர்சிபியை விட சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

முதல் 5 போட்டியில் தோல்வியை தழுவியை டெல்லி அணி 6வது போட்டியில் இரண்டு முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தது. விக்கெட் கீப்பராக பில் சால்ட், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் அணியில் சேர்க்கப்பட்டனர். அதன் பின்னர் விளையாடிய 4 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றுள்ளது. இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்பில் கூட நுழையலாம்.

தொடரின் தொடக்கத்தில் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்த டெல்லி கேப்டன் வார்னர் தற்போது தடுமாறி வருவது டெல்லி பேட்டிங்கை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான அதிக ரன்களை குவித்த வீரராக இருந்து வரும் வார்னர், தனது பார்மை இன்றைய போட்டியிலும் தொடர்வாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கடந்த போட்டியில் விளையாடாமல் போனது பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே அவர் இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை என்றால் டெல்லி அணிக்கு சிக்கல்தான்.

பெளலிங்கில் இஷாந்த் ஷர்மா, நார்ட்ஜே ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகின்றனர். அந்த வகையில் பார்மில் இருக்கும் வீரர்களை நம்பியே டெல்லி அணி உள்ளது.

ஆர்சிபி அணியை பெறுத்தவரை தற்போது புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பவர்ப்ளே ஓவர்களில் கோலி - டூப்ளெசிஸ் அருமையான தொடக்கத்தை தருகிறார்கள். ஆனால் பினிஷிங் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் தவித்து வருகிறது.

பெளலிங்கிஸ் வேகப்பந்து வீச்சுக்கு முகமது சிராஜ், ஸ்பின்னுக்கு ஹசரங்கா ஆகியோர் மிரட்டி வருகிறார்கள். அதேபோல் காயமடைந்த் டேவிட் வில்லேக்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் இடம்பிடித்து இருப்பது பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் அல்லது பெளலிங் என எதாவது ஒன்றில் தனது பங்களிப்பு அளித்து வருகிறார்.

அதேபோல் ஆர்சிபி அணி கடந்த 2021 முதல் டெல்லி அணிக்கு எதிராக தோல்வி அடையாமல் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே அந்த வெற்றி பயணத்தை தொடரவே முயற்சிக்கும்.

ஆடுகளம் எப்படி?

அருண் ஜெட்லி மைதானம் பேட்ஸ்மேன்களை காட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. எனவே வானவேடிக்கையை காட்டிலும் பேட்டிங், பெளலிங் என இரண்டுமே முக்கிய பங்கு வகிக்கும் என நம்பலாம்.

இரண்டு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்று இருப்பதால் இன்றைய போட்டியில் முழு தன்னம்பிக்கையுடனே களமிறங்கும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி