தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pbks: ஷார்ட் அதிரடியால் ஸ்கோரை உயர்த்திய பஞ்சாப்.. குஜராத்துக்கு 154 டார்கெட்

PBKS: ஷார்ட் அதிரடியால் ஸ்கோரை உயர்த்திய பஞ்சாப்.. குஜராத்துக்கு 154 டார்கெட்

Manigandan K T HT Tamil

Apr 13, 2023, 09:29 PM IST

Gujrat Titans: 120 பந்துகளில் 154 ரன்களை எடுத்தால் குஜராத் அணி வெற்றி பெறும். (PTI)
Gujrat Titans: 120 பந்துகளில் 154 ரன்களை எடுத்தால் குஜராத் அணி வெற்றி பெறும்.

Gujrat Titans: 120 பந்துகளில் 154 ரன்களை எடுத்தால் குஜராத் அணி வெற்றி பெறும்.

தவன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மொஹாலியில் இன்று மோதுகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா, பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது.

ஓபனர்களாக பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவன் களம் புகுந்தனர். ஷமி வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அந்த கேட்ச்சை ரஷித் கான் பிடித்தார்.

பின்னர், தவனும் 4வது ஓவரில் கேட்ச் ஆனார். மாத்யூ ஷார்ட் மட்டும் நிதானமாக விளையாடி 36 ரன்கள் எடுத்தார்.

ஆனால், அவரும் 7வது ஓவரில் ஆட்டமிழக்க அணி ரன்கள் எடுக்க தடுமாறியது.

பின்னர், பனுகா ராஜபட்சே, ஜிதேஷ் சர்மா ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.

ஆனாலும், அவர்களும் பெரிய அளவில் ஸ்கோர் எதுவும் எடுக்க முடியவில்லை. குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சாம் கர்ரன் 22 ரன்களில் நடையைக் கட்டினார். ஷாருக் கான் 22 ரன்களிலும், ரிஷி தவன் 1 ரன்னிலும் ரன் அவுட்டாகினர். இவ்வாறாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது.

120 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் விளையாடவுள்ளது.

மோகித் சர்மா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, லிட்டில், ஜோசப், ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஐபிஎல் 2023-இல் இந்த ஆட்டம் 18வது லீக் ஆட்டம் ஆகும். பஞ்சாப் அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் நன்கு பயிற்சி செய்த மைதானம் என்பதாலும் கூடுதல் வலிமையுடன் களமிறங்கியது.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்