தமிழ் செய்திகள்  /  Sports  /  Mithchell Marsh Back To Dc And Opts To Bowl Against Rcb In Todays Match

RCB vs DC:வந்தார் புதுமாப்பிள்ளை மார்ஷ்!ஸ்பின் அச்சுறுத்தலை தர இருக்கும் ஆர்சிபி

Apr 15, 2023, 03:27 PM IST

ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ் அணிகளில் தலா ஒரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் வெற்றிக்கான தேடலில் டெல்லி அணி களமிறங்கும் நிலையில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் இரண்டாவது வெறறியை பெறும் வேண்டும் என முனைப்பிலும் விளையாடுகிறது.

ஐபிஎல் 2023 சீசனின் 20வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

திருமணம் செய்து கொள்வதற்காக சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு ஆஸ்திரேலியா பறந்த மிட்செல் மார்ஷ் தற்போது அணியில் மீண்டும் இணைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ரோவ்மன் பவல் நீக்கப்பட்டு இன்றைய போட்டியில் மிட்செல் மார்ஷ் மீண்டும் களமிறங்குகிறார்.

அதேபோல் ஆர்சிபி அணியிலும் டேவிட் வில்லே நீக்கப்பட்டு, இலங்கை அ்ணியின் பெளலிங் ஆல்ரவுண்டர் வானிந்து ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார். டேவிட் வில்லே நீக்கப்பட்டாலும், அவர் இம்பேக்ட் வீரர்களில் ஒருவராக உள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் ப்ருத்வி ஷா, முகேஷ் குமார், பிரவீன் துபே, ஷர்ப்ரஸ் கான், சேட்டன் சக்காரியா ஆகியோர் இம்பேக்ட் வீரர்களாக உள்ளனர்.

ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியில் சுயாஷ் பிரபுதேசாய், டேவிட், வில்லே, ஆகாஷ் தீப், கரண் ஷர்மா, அனுஜ் ராவத் ஆகியோர் இம்பேக்ட் வீரராக உள்ளார்.

ஆர்சிபி அணி 3 போட்டிகலில் 2 வெற்றியுடனும், டெல்லி அஅணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாமலும் உள்ளது. இரு அணிகளும் கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

இதையடுத்து டெல்லி அணி முதல் வெற்றிக்கான தேடலில் களமிறங்கும் நிலையில், முந்தையே போட்டியில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் பெற்ற தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பு முயற்சியில் ஆர்சிபி அணியும் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.

டாபிக்ஸ்