தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ms Dhoni: தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என நான் நினைக்கவில்லை-ரோகித்

MS Dhoni: தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என நான் நினைக்கவில்லை-ரோகித்

Manigandan K T HT Tamil

Mar 29, 2023, 02:58 PM IST

google News
Rohit Sharma: தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்கிறார் ரோகித்.
Rohit Sharma: தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்கிறார் ரோகித்.

Rohit Sharma: தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்கிறார் ரோகித்.

"இன்னும் சில சீசன்களில் விளையாடுவதற்கு தோனி தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன்'' என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL)எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. 2023 சீசன் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மார்ச் 31ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இந்நிலையில், மும்பையில் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது கடைசி சீசன் ஐபிஎல் இதுதான்.. அதுதான்.. என நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன் என்றார் ரோகித் சர்மா.

தோனிக்கு இப்போது 41 வயது ஆகிறது. இந்திய அணிக்காக 2 உலகக் கோப்பையை வென்றுத் தந்தவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பவர். அந்த அணிக்கு 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுத் தந்த வெற்றி கேப்டன்.

அவருக்கு சென்ற ஐபிஎல் கடைசியாக இருக்கும் என்று அனைவரும் கூறினர். ஆனால், அடுத்த ஐபிஎல் போட்டியில் நான் விளையாடுவேன் என்று தோனி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது 2023 ஐபிஎல் சீசனுடன் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று செய்திகள் பரவி வருகின்றன. பென் ஸ்டோக்ஸ்தான் அடுத்த சிஎஸ்கே கேப்டன் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தோனிக்கு ஆதரவாக ரோகித் கருத்து தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன்

இதனிடையே, முன்னாள் சிஎஸ்கே வீரரும், ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் பிளேயருமான ஷேன் வாட்சன் கூறுகையில், "தோனிக்கு இதுதான் தான் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என நான் கேள்விப்படுகிறேன். நான் அப்படி நினைக்கவில்லை. அடுத்த மூன்று முதல் 4 ஆண்டுகள் வரை அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட முடியும். அவர் ஃபிட்டாக இருக்கிறார். விக்கெட் கீப்பிங்கையும் சிறப்பாக செய்கிறார். அவருடைய ஆட்டத்தைப் போலவே அவருடைய கேப்டன்ஷிப்பும் சிறப்பாக இருக்கும்.

சிஎஸ்கேவின் சக்சஸ் ஸ்டோரிக்கு அவர் தான் முக்கியக் காரணம்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி