தமிழ் செய்திகள்  /  Sports  /  Indw Whitewash Engw: India Whitewash England In Jhulan Goswami's Last Match In Iconic Lords Ground

IndW whitewash EngW: இங்கிலாந்தை ஓய்ட் வாஷ் செய்த இந்தியா! கோஸ்வாமிக்கு பரிசு

Sep 25, 2022, 01:23 AM IST

இங்கிலாந்து மகளிர் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே 3-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரில் வீழ்த்தியது மட்டுமில்லாமல் , தனது 20 ஆண்டு கால பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார் இந்தியா மகளிர் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமி.
இங்கிலாந்து மகளிர் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே 3-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரில் வீழ்த்தியது மட்டுமில்லாமல் , தனது 20 ஆண்டு கால பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார் இந்தியா மகளிர் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமி.

இங்கிலாந்து மகளிர் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே 3-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரில் வீழ்த்தியது மட்டுமில்லாமல் , தனது 20 ஆண்டு கால பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார் இந்தியா மகளிர் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமி.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபோதிலும், அடுத்ததாக நடைபெற்ற ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியை ஒய்ட் வாஷ் செய்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

முதல் போட்டியில் ஸ்மிருத்தி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர், யஷ்திகா பாட்யா ஆகியோரின் சிறப்பான பேட்டிங் மூலம் 227 ரன்களை எளிதாக சேஸ் செய்தது. இதன் பின்னர் ஹர்மன்ப்ரீத் அதிரடியான 143 ரன்களின் மூலம் 333 ரன்கள் குவித்த இந்தியா, 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணியினர், மூன்றாவது மற்றும் இந்திய சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமியின் கடைசி போட்டியில் சிறப்பான வெற்றியுடன் அவரை வழியனுப்பியுள்ளனர்.

169 ரன்கள் என குறைவான ஸ்கோர் எடுத்தாலும், இங்கிலாந்து அணியை 153 ரன்களில் காலி செய்து 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, அதன் சொந்த மண்ணில் வைத்தே ஒய்ட் வாஷ் செய்துள்ளது. இந்த வெற்றி ஓய்வு பெற்றுள்ள ஜூலன் கோஸ்வாமிக்கு சிறந்த பரிசாகவே அமைந்துள்ளது.

இந்தியாவுக்காக 2002 முதல் 2022 வரை என 20 வருடங்கள் தனது அற்புத பந்து வீச்சால் இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகளை குவித்து தந்த ஜூலன் கோஸ்வாமி தனது கடைசி போட்டியிலும் முத்திரை பதித்ததார். 10 ஓவர்கள் வீசிய அவர் 3 மெய்டன்களுடன் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக, டாஸ் போடுவதற்கு இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், ஜூலன் கோஸ்வாமியை அனுப்பியது உணர்ச்சிகரமான தருணமாக அமைந்திருந்தது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பெருமைக்குரிய கோஸ்வாமியை கெளரவப்படுத்தும் விதமாக பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டுக்கு சக்தாகா எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

39 வயதாகும் கோஸ்வாமி டெஸ்ட், ஒரு நாள் டி20 என மொத்தம் 284 போட்டிகளில் பங்கேற்று, 355 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனையாக திகழும் கோஸ்வாமி கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்து கொண்டார்.

 

டாபிக்ஸ்