தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Rahane: வெளிநாட்டு மண்ணில் எப்போதும் ராஜா.. ரஹானேவுக்கு இன்று பிறந்த நாள்!

HBD Rahane: வெளிநாட்டு மண்ணில் எப்போதும் ராஜா.. ரஹானேவுக்கு இன்று பிறந்த நாள்!

Manigandan K T HT Tamil

Jun 06, 2023, 05:00 AM IST

google News
Ajinkya Rahane: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடுபவர் ரஹானே. 2007-2008 ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக ரஹானே மும்பை அணிக்காக அறிமுகமானார்.
Ajinkya Rahane: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடுபவர் ரஹானே. 2007-2008 ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக ரஹானே மும்பை அணிக்காக அறிமுகமானார்.

Ajinkya Rahane: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடுபவர் ரஹானே. 2007-2008 ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக ரஹானே மும்பை அணிக்காக அறிமுகமானார்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்காக 19 பந்துகளில் அரை சதம் விரட்டினார் ரஹானே.

இந்த ஐபிஎல் சீசனில் ரஹானே 16 ஆட்டங்களில் விளையாடி 326 ரன்களை குவித்தார். 2 அரை சதங்களை அவர் விளாசினார்.

அதிரடியாக விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்கு இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரஹானேவுக்கு இன்று பிறந்த நாள் (ஜூன் 06).

இவரது முழு பெயர் அஜிங்க்ய மதுகர் ரஹானே. டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் ரஹானே. தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடுபவர் ரஹானே. 2007-2008 ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக ரஹானே மும்பை அணிக்காக அறிமுகமானார். இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை பார்டர்-கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக கடந்த 2013இல் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபடுவார்.

முதல் டெஸ்ட் சதத்தை அவர் நியூசிலாந்தில் தான் அடித்தார். 2020-2021 பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டியில் ஆஸ்திரேலியாவில் ரஹானே தலைமையிலான இந்திய அணி ஜெயித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது.

மகாராஷ்டிர மாநில் அகமதுநகர் மாவட்டத்தில் 1988ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி பிறந்தார் ரஹானே. இவருக்கு சகோதரர், சகோதரி உள்ளனர்.

இவருக்கு 7 வயதாக இருக்கும்போது இவரது தந்தை கிரிக்கெட் கோச்சிங் சென்டரில் சேர்த்துவிட்டார்.

17 வயது முதல் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் ஆம்ரேவிடம் பயிற்சி பெற்றார்.

19 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் தடம் பதித்தார். பின்னர், யு-19 இந்திய அணியில் இடம்பிடித்து நியூசிலாந்துக்கு சென்று விளையாடினார். அப்போது 2 சதங்களை பதிவு செய்து கவனம் ஈர்த்தார். பாகிஸ்தானில் நடந்த முகமது நிசார் டிராபிக்கா இவர் தேர்வு செய்யப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 82 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரஹானே, 4,931 ரன்களை குவித்துள்ளார். அதில் 12 சதங்களும், 25 அரை சதங்களும் அடங்கும்.

இங்கிலாந்துக்கு எதிராக 2011இல் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ரஹானே, இதுவரை மொத்தம் 90 ஐம்பது ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி 2,962 ரன்களை குவித்துள்ளார். அதில் 3 சதங்களும், 24 அரை சதங்களும் அடங்கும். டெஸ்டில் இவரது அதிகபட்சம் 188.

இவரது தோழி ராதிகா தோபாவ்கரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யா என்ற மகள் உள்ளார்.

சிஎஸ்கேவில் பொளந்து கட்டியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ள ரஹானே மீது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளது.

வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக செயல்படக் கூடியவர் ரஹானே என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் சமீபத்தில் புகழாரம் சூட்டியிருந்தார்.

அனைவரின் எதிர்பார்ப்பையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்புவோம்.

இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் ரஹானேவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி