தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India Player In Kenya Team: கென்யா அணியில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி வீரர்

India player in kenya team: கென்யா அணியில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி வீரர்

Dec 27, 2022, 10:27 PM IST

google News
ஆப்பரிக்கா நாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் பிரபலமான புஷ்கர் ஷர்மா, கென்யா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆப்பரிக்கா நாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் பிரபலமான புஷ்கர் ஷர்மா, கென்யா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஆப்பரிக்கா நாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் பிரபலமான புஷ்கர் ஷர்மா, கென்யா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

உலக கிரிக்கெட்டில் ஒரு நாட்டை சேர்ந்த வீரர்கள் பிற நாட்டின் அணிக்காக விளையாடுவதென்பது நிகழ்வது இயல்புதான். அந்த வகையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் பலரும் பல்வேறு நாடுகளின் தேசிய அணிகளில் இடம்பிடித்து விளையாடியுள்ளனர்.

அந்த வகையில், கடந்த நவம்பரில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்று ஏ-வில் விளையாடும் வாய்ப்பை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட புஷ்கர் ஷர்மா இடம்பிடித்தார்.

இதையடுத்து இவர் தற்போது கென்யா தேசிய கிரிக்கெட் அணியில் வீரராக சேர்கப்பட்டுள்ளார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளரான இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நைரோபி பிராந்திய கிரிக்கெட் சங்க சூப்பர் டிவிஷன் லீக்கில் 14 இன்னிங்ஸில் 841 ரன்களை குவித்தார்.

இதைத்தொடர்ந்து கென்யாவில் நடைபெற்ற ஆப்பிரிக்க கிரிக்கெட் ப்ரீமியர் லீக் தொடரில் 228 ரன்கள், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தனது சிறப்பான ஆட்டம் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக மாறிய புஷ்கர் ஷர்மா, கிரிக்கெட் வல்லுனர்களின் கவனத்தையும் பெற்றார். இதன்மூலம் கென்யா தேசிய கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

கென்யா வீரராக மாறியிருக்கும் இவர், கிரிக்கெட் விளையாடுவதற்காக தனக்கு ஸ்பான்ஸர் செய்து உதவிய இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கென்யா அணி அடுத்ததாக விளையாட இருக்கும் தகுதி சுற்று போட்டி, 2024 டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த இவர், கிரிக்கெட் தனது ஆரம்பகால கிரிக்கெட் பயிற்சியை அங்குதான் மேற்கொண்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் மும்பை அணிக்காக அண்டர் 16 போட்டியிலும் விளையாடியுள்ளார்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி