தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Sa T20 Series: முதல் போட்டி!வரலாற்றை மாற்றி அமைக்கும் முனைப்பில் இந்தியா

Ind vs SA t20 series: முதல் போட்டி!வரலாற்றை மாற்றி அமைக்கும் முனைப்பில் இந்தியா

Sep 28, 2022, 11:08 AM IST

google News
இதுவரை ஏழு முறை டி20 தொடர்களில் இந்தியா - தென்ஆப்பரிக்கா அணிகள் மோதியுள்ள நிலையில் இந்தியா 3, தென்ஆப்பரிக்க 2, சமனில் இரண்டு முறை என இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இருப்பினும் இதில் ஒரு முறை கூட சொந்த மண்ணில் இந்தியா தொடரை வென்றதில்லை.
இதுவரை ஏழு முறை டி20 தொடர்களில் இந்தியா - தென்ஆப்பரிக்கா அணிகள் மோதியுள்ள நிலையில் இந்தியா 3, தென்ஆப்பரிக்க 2, சமனில் இரண்டு முறை என இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இருப்பினும் இதில் ஒரு முறை கூட சொந்த மண்ணில் இந்தியா தொடரை வென்றதில்லை.

இதுவரை ஏழு முறை டி20 தொடர்களில் இந்தியா - தென்ஆப்பரிக்கா அணிகள் மோதியுள்ள நிலையில் இந்தியா 3, தென்ஆப்பரிக்க 2, சமனில் இரண்டு முறை என இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இருப்பினும் இதில் ஒரு முறை கூட சொந்த மண்ணில் இந்தியா தொடரை வென்றதில்லை.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதையடுத்து முதலில் டி20 தொடர் நடைபெற இருக்கும் நிலையில், முதல் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்தியா, அதனால் பெற்ற நம்பிக்கையுடன் தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது.

இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து காயம் காரணமாக பேட்டிங் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதேபோல் அணியில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி, கொரோனா பாதிப்பு காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து இவருக்கு மாற்று வீரராக ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமத் சேர்க்கப்பட்டுள்ளார்.

நான்கு முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத நிலையில், புதிதாக இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்திய வீரர்கள் ஷபாஸ் அகமத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ளனர்.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாட வீரர்களுக்கு தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ரோஹித்தும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி அணியில் இடம்பிடித்து இன்னும் ஒரு போட்டிகூட விளையாடாமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், தீபக் சஹார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. தீபக் சஹார் டி20 உலகக் கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி பேட்டிங்கை பொறுத்தவரை கேஎல் ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என பலமாகவே உள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக பினிஷிங் பணியை மேற்கொள்ள தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர்.

ஆனால் பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, ஹர்ஷல் படேல், சஹால், அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேல் ஆகியோர் உள்ளனர். இவர்களில் அக்‌ஷர் படேல் தவிர மற்ற பெளலர்கள் ரன்களை வாரி வழங்கு் வள்ளல்களாகவே இருந்து வருகிறார்கள். குறிப்பாக கடைசி கட்டத்தில் இந்திய பெளலர்களின் ஓவர்கள் பவுண்டரி, சிக்ஸர்களாக எதிரணி பேட்ஸ்மேன்களால் அடித்து ஆடப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் நடைபெறும் தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் இந்திய பெளலர்கள் பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளனர். எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினாலே பெளலிங்கிலும் வலுவான அணியாக இந்தியா உருவெடுக்கலாம்.

இந்தியா - தென்ஆப்பரிக்கா இடையே இதுவரை 7 டி20 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் நான்கு தொடர்கள் தென்ஆப்பரிக்காவிலும், மூன்று இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான டி20 தொடர்கள் 3 வெற்றிகளை பெற்று இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் முனைப்பிலும், டி20 உலகக் கோப்பை தொடரை பாஸிடிவான மனநிலையில் எதிர்கொள்ளும் முனைப்பிலும் தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் டி20 போட்டிகளை பொறுத்தவரை இரு அணிகளும் 20 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 11, தென்ஆப்பரிக்கா 8, ஒரு போட்டியில் முடிவு இல்லை. 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி