Tiruppur vs Chepauk: திருப்பூரை சந்திக்கிறது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-2வது வெற்றி பெறுமா?
Jun 15, 2023, 06:40 AM IST
TNPL: சேப்பாக் அணி இரண்டாவது வெற்றிக்கும், திருப்பூர் அணி முதல் வெற்றியை நோக்கியும் விளையாடும்.
கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் இன்றிரவு 7.15 மணிக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே 5வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
சேப்பாக்கம், சேலம் அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது. அதேநேரம், இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி, கோவை அணியிடம் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சேப்பாக் அணி இரண்டாவது வெற்றிக்கும், திருப்பூர் அணி முதல் வெற்றியை நோக்கியும் விளையாடும்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியைப் பொருத்தவரை பிரதோஷ் பால் 88 ரன்களை விளாசி அசத்தினார். ஜெகதீஷன், அபராஜித், சஞ்சய் யாதவ் ஆகியோரும் சிறப்பாக விளையாடினர்.
பந்துவீச்சிலும் சேப்பாக் அணி நல்ல ஃபார்மில் உள்ளது. ராக்கி பாஸ்கர், எம்.விஜய் அருள், பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தனர்.
திருப்பூர் தமிழன்ஸைப் பொருத்தவரை லைகா கோவை அணி நிர்ணயித்த 180 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் தோல்வி கண்டது. ஆனாலும், அந்த அணியின் விக்கெட் கீப்பர் துஷார் ரஹேஜா சிறப்பாக விளையாடினார். முதல் ஆட்டத்தில் 33 ரன்களை விளாசினார்.
சூப்பர் கில்லீஸ் அணி கடந்த ஆண்டு ஒரு அற்புதமான சீசனைக் கொண்டிருந்தது மற்றும் இந்த டி.என்.பி.எல் சீசனில் ஐந்தாவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்த முறை சூப்பர் கில்லீஸ் அணியை வழிநடத்தும் பாபா அபராஜித், வெற்றிக் கொடி நாட்டும் முனைப்பில் இருக்கிறார்.
திருப்பூர் தமிழன்ஸ் முதல்முறையாக சாம்பியன் ஆக வேண்டும் என்ற முனைப்பில் விளையாடும்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி, நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி: பிரதோஷ் பால், என்.ஜெகதீசன்(கேப்டன்), பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், எஸ்.ஹரீஷ்குமார், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ரஹில் ஷா, ராமலிங்கம் ரோஹித், எம்.சிலம்பரசன், எம்.விஜூ அருள், ராக்கி பாஸ்கர், பி.ஐயப்பன், சந்தோஷ் ஷிவ், லோகேஷ் ராஜ், எஸ்.மதன்குமார், ஆர்.சிபி.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி: துஷார் ரஹேஜா(விக்கெட் கீப்பர்), என்.எஸ்.சதுர்வேத், விஜய் சங்கர், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர்(கேப்டன்), எஸ்.கணேஷ், பாலசந்தர் அனிருத், ராஜேந்திரன் விவேக், எஸ்.அஜித் ராம், பி.புவனேஸ்வரன், எஸ்.மணிகண்டன், ஜி.பெரியசாமி, கே.விஷால் வைத்யா, திரிலோக் நாக், எஸ்.ராதாகிருஷ்ணன், முகமது அலி, ஜி.பார்த்தசாரதி, எம்.ராகவன்
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்