தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Dhanapal Ganesh: சென்னையில் பிறந்து இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்த வீரர்!

HBD Dhanapal Ganesh: சென்னையில் பிறந்து இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்த வீரர்!

Manigandan K T HT Tamil

Jun 13, 2023, 05:00 AM IST

google News
Dhanapal Ganesh: புனே அகாடமியில் இருந்து ஜூலை 2011ம் ஆண்டு புனேவில் முதல் அணியில் விளையாட ஒப்பந்தமான முதல் வீரர் ஆனார்.
Dhanapal Ganesh: புனே அகாடமியில் இருந்து ஜூலை 2011ம் ஆண்டு புனேவில் முதல் அணியில் விளையாட ஒப்பந்தமான முதல் வீரர் ஆனார்.

Dhanapal Ganesh: புனே அகாடமியில் இருந்து ஜூலை 2011ம் ஆண்டு புனேவில் முதல் அணியில் விளையாட ஒப்பந்தமான முதல் வீரர் ஆனார்.

கால்பந்து வீரரான 28 வயதாகும் தனபால் கணேஷ் சென்னையில் பிறந்தவர். இவரது பிறந்த நாள் இன்று (ஜூன் 13).

1994ம் ஆண்டு பிறந்தார். கால்பந்து மீதான தீராக் காதல் காரணமாக இளம் வயது முதலே கால்பந்தை நேசிக்கத் தொடங்கினார்.

இவர் டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர் ஆவார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

அவரது ஜெர்ஸி நம்பர் 17. தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்த கணேஷ், புனே அகாடமியில் இருந்து ஜூலை 2011ம் ஆண்டு புனேவில் முதல் அணியில் விளையாட ஒப்பந்தமான முதல் வீரர் ஆனார்.

2011 முதல் 2016 வரை புனே அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். ஆனால், கோல் எதுவும் அவர் பதிவு செய்ததில்லை.

பைலான் ஆரோஸ் அணிக்காக 2012-2013 காலகட்டத்திலும், சென்னையின் அணிக்காக 2015-2016 காலகட்டத்திலும் விளையாடியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் மொத்தம் 28 ஆட்டங்களில் விளையாடியுள்ள தனபால் கணேஷ் 2 கோல்களை பதிவு செய்துள்ளார்.

2017இல் சென்னையின் சிட்டிக்காக 17 ஆட்டங்களில் விளையாடிய அவர், 1 கோலைப் பதிவு செய்தார்.

இந்தியா யு23 அணிக்காவும், இந்திய கால்பந்து அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். ஆனால், சர்வதேச அளவில் அவர் கோல் எதுவும் பதிவு செய்ததில்லை.

தமிழகத்தில் பிறந்து இந்திய அணியில் இடம்பிடித்த தனபால் கணேஷுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி