தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Ramesh Krishnan: நம்பர் 1 வீரரை வீழ்த்தி டென்னிஸ் உலகை திரும்பிப் பார்க்க வைத்த ரமேஷ் கிருஷ்ணன்!

HBD Ramesh Krishnan: நம்பர் 1 வீரரை வீழ்த்தி டென்னிஸ் உலகை திரும்பிப் பார்க்க வைத்த ரமேஷ் கிருஷ்ணன்!

Manigandan K T HT Tamil

Jun 05, 2023, 05:00 AM IST

google News
Ramesh Krishnan: டென்னிஸ் விளையாட்டில் ஒற்றையர் பிரிவு மட்டுமல்லாமல், இரட்டையர் பிரிவுகளிலும் இவர் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் கலந்து கொண்டிருக்கிறார்.
Ramesh Krishnan: டென்னிஸ் விளையாட்டில் ஒற்றையர் பிரிவு மட்டுமல்லாமல், இரட்டையர் பிரிவுகளிலும் இவர் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

Ramesh Krishnan: டென்னிஸ் விளையாட்டில் ஒற்றையர் பிரிவு மட்டுமல்லாமல், இரட்டையர் பிரிவுகளிலும் இவர் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

ரமேஷ் கிருஷ்ணன் இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரராவார். இவர் 1965-ல் சென்னையில் பிறந்தார். மற்றொரு புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ராமநாதன் கிருஷ்ணன் இவரது தந்தை ஆவார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், யு.எஸ். ஓபன் டென்னிஸ் போ்டிகளில் விளையாடியிருக்கிறார்.

ஒற்றையர் பிரிவு மட்டுமல்லாமல், இரட்டையர் பிரிவுகளிலும் இவர் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், சாம்பியன் ஆனதில்லை. ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் 1992ம் ஆண்டு பங்கேற்றிருக்கிறார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 1987இல் பைனல் வரை இவர் அங்கம் வகித்த அணி முன்னேறியது.

அதிகபட்சமாக தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் 23 வரை முன்னேறியிருக்கிறார். இரட்டையர் பிரிவில் 114 வது ரேங்க் வரை முன்னேறியிருக்கிறார்.

இவரது தந்தை ராமநாதன் கிருஷ்ணன், 1960களில் இரு முறை விம்பிள்டன் அரையிறுதியில் நுழைந்திருக்கிறார்.

விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ரமேஷ் கிருஷ்ணன் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். 2007இல் இவர் இந்திய டென்னிஸ் அணியை டேவிஸ் கோப்பை போட்டியில் வழிநடத்தினார்.

1992 ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸுடன் இணைந்து இவர் விளையாடினார். இருவரும் காலிறுதி வரை முன்னேறினர்.

டென்னிஸில் இவரது பங்களிப்பிற்காக இந்திய அரசு, இவருக்கு 1998ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது. 1993 இல் ஓய்வு பெற்ற இவர், சென்னையில் டென்னிஸ் அகாடெமி நடத்தி வருகிறார். பயிற்சியாளராக இருக்கிறார்.

இவருக்கு நந்திதா கிருஷ்ணன், காயத்ரி கிருஷ்ணன் என 2 மகள்கள் உள்ளனர். காயத்ரி கிருஷ்ணன், டென்னிஸ் வீராங்கனையாக இருக்கிறார்.

1989 ஆஸி., ஓபன் டென்னிஸ் போட்டியில் அப்போதைய நம்பர் 1 வீரர் மாட்ஸ் விலாண்டரை (ஸ்வீடன்) ரமேஷ் கிருஷ்ணன் வீழ்த்தினார். இது மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டது. அவர், 6-3, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் விலாண்டரை வீழ்த்தினார்.

டென்னிஸ் பிரபலமாகாத காலத்தில் இந்தியா சார்பில் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று செய்தித்தாள்களில் டென்னிஸ் செய்தியை இடம்பிடிக்க செய்த ரமேஷ் கிருஷ்ணனுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகள்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி