தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ms Dhoni Fitness: ‘அவருக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு’ - தோனி ஃபிட்னஸ் ரகசியம் இது! - ராஜாமணி பேட்டி!

MS Dhoni Fitness: ‘அவருக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு’ - தோனி ஃபிட்னஸ் ரகசியம் இது! - ராஜாமணி பேட்டி!

May 28, 2023, 06:34 AM IST

பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜாமணி தோனியின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து பேசியிருக்கிறார்.
பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜாமணி தோனியின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து பேசியிருக்கிறார்.

பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜாமணி தோனியின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து பேசியிருக்கிறார்.

தன்னுடைய கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதாக தோனி சொன்னாலும் அவரது ரசிகர்கள் அவரை விட்ட பாடில்லை. மீண்டும் அவர் விளையாடியே ஆக வேண்டும், உங்களை நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை குரல்களை மீம்களாகவும் பதிவுகளாகவும் வெளியிட்டு வருகின்றனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

தோனியின் பல விஷயங்கள் நமக்கு ஆச்சரியம் என்றாலும், அவரது ஃபிட்னஸ் இன்னும் ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில் அவரது ஃபிட்னஸ் குறித்து பயிற்சியாளர் ராஜா மணிபேசியதை இங்கு பார்க்கலாம். 

 “நான் தோனியை பெரிதாக ட்ரெயின் செய்ததில்லை. ஆனால் கடைசி போட்டியில் அவருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தோனி பயங்கரமான சின்ன சின்ன விஷயங்களைச் சொன்னார். அதை எனக்கு கற்றுக் கொள்வதற்கு எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது நாம் புதியதாக எதையும் செய்யக்கூடாது, அது நமக்கு சோர்வை கொடுத்து விடும். அதேபோல ரன்னிங் மிக மிக முக்கியம் என்று சொன்னார். 

அதை நான் பலமுறை உணர்ந்து இருக்கிறேன். ஸ்ட்ரென்த் சம்பந்தமான பயிற்சிகளை கூட ஆறு, ஏழு நாட்கள் செய்யாமல் இருக்கலாம். ஆனால் ஸ்பீடு செஷன் சம்பந்தமான பயிற்சிகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

தோனிக்கு  எல்லா விஷயங்களுமே தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் சரியாக செய்வதால் இப்போது பயங்கர ஃபிட்டாக இருக்கிறார். அதை வைத்து பார்க்கும் பொழுது அடுத்த இரண்டு மூன்று வருடங்கள் அவர் நன்றாக ஆடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவரின் ஓட்டம் எப்போதுமே பயங்கர ஸ்பீடாக இருக்கும். பொதுவாக இந்தியாவில் கிரிக்கெட் பேட்டை இரண்டு கைகளில் வைத்துக்கொண்டு ஓடுவார்கள்.

ஆனால் தோனி பேட்டை கீழே வைத்துக் கொண்டு ஓடுவார். இது அவரது ஓட்டத்தின் வேகத்தை குறைக்காமல் பார்த்துக் கொள்ளும். இது குறித்து அவரிடம் நான் உங்களுக்கு அறிவியல் தெரியுமா?இல்லை நீங்களாக செய்கிறீர்களா என்று கேட்டேன்.  எனக்கே அது தோன்றியது என்று சொன்னார். 

நான் தோனி எப்படி இப்படி இருக்கிறார் என்று அஸ்வினிடம் கேட்டிருக்கிறேன்; அதற்கு அஸ்வின் கிரிக்கெட் என்பது மிகப்பெரிய உலகம். தோனி அதில் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார். குறிப்பாக அடிப்படையான விஷயங்கள் அனைத்துமே அவர் தெரிந்து வைத்திருக்கிறார். 

மற்றவர்கள் எல்லாரும் அட்வான்ஸ் அட்வான்ஸ் என்று மேலே உள்ளதை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். கீழே உள்ளதை விட்டு விடுகிறார்கள் ஆனால் இவர் அடிப்படையான விஷயங்களில் அவ்வளவு தெளிவாக இருக்கிறார். அவர் பயிற்சியும் மிகவும் எளிமையாக தான் செய்வார். அதேபோல எல்லோருக்கும் பொறுப்பு கொடுப்பார். அது பிறரை இன்னும் கவனமோடு விளையாட வைக்கும்” என்று பேசினார். 

நன்றி: பிஹைண்ட்வுட்ஸ்

டாபிக்ஸ்