தமிழ் செய்திகள்  /  Sports  /  Fifa World Cup 2022: Japan Humble Germany In Sensational Fightback

FIFA world cup 2022: முன்னாள் சாம்பியன் ஜெர்மனிக்கு ஷாக் கொடுத்த ஜப்பான்!

Nov 24, 2022, 10:52 PM IST

இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்தது செளதி அரேபியா, அதன் தொடர்ச்சியாக தற்போது நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது ஜப்பான்.
இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்தது செளதி அரேபியா, அதன் தொடர்ச்சியாக தற்போது நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது ஜப்பான்.

இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்தது செளதி அரேபியா, அதன் தொடர்ச்சியாக தற்போது நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது ஜப்பான்.

22வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது செளதி அரேபியா அணி. இதைத்தொடர்ந்து தற்போது அதைப் போன்று மற்றொரு நிகழ்வு அடுத்த இருநாள்களில் முன்னாள் சாம்பியன் அணியான ஜெர்மனிக்கு நிகழ்ந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

கலிபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டு அணி வீரர்களும் போட்டி போட்டு விளையாடினர். சமமான வாய்ப்புகளுடனே சென்றுகொண்டிருந்த ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் குண்டோகன் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.

இதையடுத்து முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலை பெற்றது. செளதி அரேபியா போட்டியில் நடைபெற்றது போன்ற இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுத்த ஜப்பானியர்கள் கோல் அடிப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டனர்.

நேரமும் சென்றுகொண்டிருக்க ஜப்பான் அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்காமல் போனது. 70 நிமிடங்கள் ஆட்டம் கடந்த நிலையில் ஜெர்மனி வீரர்கள் ஒரு கோல் முன்னிலையில் இருந்ததால் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர்.

இதை சாதகமாக பயன்படுத்திய ஜப்பான் வீரர்கள் அட்டாக் கேமை கடைப்பிடித்தனர். பந்தை தங்களது ஆக்கிரமிப்பில் வைத்திருந்து அவர்கள் மெல்ல மெல்ல வாய்ப்பை உருவாக்கினர். ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிஸ்து டோன் தனது அணிக்கான முதல் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட, அது அடங்குவதற்குள்ளாகவே ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டகுமா ஆசானோ கோல் அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது.

மீதமுள்ள 7 நிமிடங்களில் எப்படியாவது ஒரு கோல் அடித்துவிட வேண்டும் என்ற நெருக்கடி ஜெர்மனிக்கு ஏற்பட்டது. ஆனால் கடைசி வரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முழு ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கணக்கில் 4 முறை உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது ஜப்பான்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினாவை தொடர்ந்து ஜெர்மனி அணி பலம் குறைந்த அணியிடம் முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியுள்ளது.

இந்தப் போட்டியில் இரு நாட்டு வீரர்களும் கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் யாருக்கும் மஞ்சள், சிவப்பு அட்டை வழங்கப்படவில்லை.

டாபிக்ஸ்