SL vs AFG 2nd ODI: ஆப்கனுக்கு எதிரான do-or-die ஆட்டத்தில் 21 வது அரை சதம் விளாசிய இலங்கை வீரர்
Jun 05, 2023, 09:16 AM IST
Kusal Mendis: தொடக்க வரிசை வீரர்கள் வெளுத்து வாங்கினர். பதும் நிசங்கா 43 ரன்களும், திமுத் கருணாரத்னே 52 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
இ லங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்து ஆப்கானிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்தோட்டாவில் 2ம் தேதி நடந்தது.
அந்த ஆட்டத்தில் ஆப்கன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி கண்டது.
இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் திட்டமிட்டபடி இன்று காலை 10 மணிக்கு ஹம்பன்தோட்டா மகிந்த ராஜபக்ச சர்வதேச ஸ்டேடியத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன்களை குவித்தது.
தொடக்க வரிசை வீரர்கள் வெளுத்து வாங்கினர். பதும் நிசங்கா 43 ரன்களும், திமுத் கருணாரத்னே 52 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் சோபிக்கத் தவறிய விக்கெட் கீப்பர் குசால் மென்டிஸ் இந்த ஆட்டத்தில் அதிரடி காண்பித்தார்.
75 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய அவர், 7 போர்ஸ், 1 சிக்ஸரை பதிவு செய்தார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 104.00 ஆக இருந்தது.
சதீரா சமரவிக்ரமா 44 ரன்களிலும், முதல் ஒரு நாள் ஆட்டத்தில் அரை சதம் விளாசிய சதீரா இந்த ஆட்டத்தில் 44 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
கேப்டன் தசுன் சனகா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்களும் ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இவ்வாறாக இலங்கை 50 ஓவர்களில் 323 ரன்களை 6 விக்கெட் இழப்புக்கு சேர்த்தது.
50 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆப்கன் விளையாடுகிறது.
ஆப்கன் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி, ஃபரீன் அகமது மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது, முஜீப் உர் ரகுமான் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
டி20 நம்பர் 1 பவுலர் ரஷீத் கான் இல்லாத குறை இந்த ஆட்டத்தில் ஆப்கனிடம் தெரிந்தது.
இந்த ஆட்டத்தில் அரை சதம் பதிவு செய்ததன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் 21 வது அரை சதத்தை பதிவு செய்திருக்கிறார் குசால் மென்டிஸ்.
28 வயதாகும் குசான் மென்டிஸ் வலது கை ஆட்டக்காரர் ஆவார்.
இதுவரை 95 ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 2600க்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளார்.
2 சதங்களை விளாசியிருக்கிறார். இவரது அதிகபட்சம் 119.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்