தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2023 Trophy: ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சிஎஸ்கே உரிமையாளர்!

IPL 2023 Trophy: ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சிஎஸ்கே உரிமையாளர்!

Karthikeyan S HT Tamil

Jun 06, 2023, 02:31 PM IST

google News
முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. மழை அவ்வப்போது குறுக்கிட்ட போதிலும் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது. இதன் மூலம் தோனி தலைமையிலான அணி அதிக முறை ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற அணி என்ற சாதனையை மும்பை அணியுடன் பகிர்ந்து கொண்டது. குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றதற்கு அப்போதே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஐபிஎல் 2023 வெற்றிக் கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

இந்த சந்திப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி