தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Chennai Squash World Cup: சென்னையில் அடுத்த மாதம் ஸ்குவாஷ் திருவிழா-போட்டி அட்டவணை, மேலும் விவரம் உள்ளே

Chennai Squash World Cup: சென்னையில் அடுத்த மாதம் ஸ்குவாஷ் திருவிழா-போட்டி அட்டவணை, மேலும் விவரம் உள்ளே

Manigandan K T HT Tamil

May 22, 2023, 05:47 PM IST

google News
Udhayanidhi Stalin: "2023 ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய எட்டு நாடுகளை சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்கின்றனர்."
Udhayanidhi Stalin: "2023 ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய எட்டு நாடுகளை சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்கின்றனர்."

Udhayanidhi Stalin: "2023 ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய எட்டு நாடுகளை சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்கின்றனர்."

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி – 2023, சென்னையில் 13.06.2023 முதல் 17.06.2023 வரை நடைபெறுகிறது. இந்த போட்டி தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் சென்னை கன்னிமாரா ஹோட்டலில் இன்று (22.05.2023) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்திய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

2023 SDAT-WSF ஸ்குவாஷ் உலகக் கோப்பையை ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை நடத்த விளையாட்டு நகரமான சென்னை தயாராகி வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் இந்த போட்டி, உலகெங்கிலும் உள்ள சிறந்த ஸ்குவாஷ் வீரர்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல் கோப்பையினை வெல்ல நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என நான் நம்புகிறேன்.

2023 ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய எட்டு நாடுகளை சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

நமது ரசிகர்கள் தங்கள் சொந்த அணியை ஆதரிக்கவும், உலகத் தரம் வாய்ந்த ஸ்குவாஷ் விளையாட்டைக் காணவும் வாய்ப்பைப் பெறுவார்கள். தேசிய சாம்பியன்களான அபய் சிங் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா (19 முறை தேசிய சாம்பியன்) மற்றும் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தன்வி கண்ணா ஆகியோருடன், தற்போது உலகத் தரவரிசையில் 19வது இடத்தில் உள்ள இந்தியக் குழுவை சவுரவ் கோசல் வழிநடத்துவார்.

2023 சென்னை ஸ்குவாஷ் உலகக் கோப்பை WORLDS QUASH.TV (உலகம் முழுவதும்) மற்றும் ஒலிம்பிக் சேனலில் நேரடியாகவும், இலவசமாகவும் ஒளிபரப்பப்படும்.

2023 SDAT - WSF SQUASH உலகக் கோப்பை ஸ்குவாஷின் உணர்வைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள வீரர்கள் மற்றும் ரசிகர்களை ஒன்றிணைக்கும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இந்த போட்டிகள் இருக்கும்.

ஸ்குவாஷ் நட்சத்திரங்கள் போட்டியிடுவதால், இந்த தீவிர போட்டியினை காண சென்னை மட்டுமல்ல உலகமே தயாராக உள்ளது. இந்த உற்சாகத்தை ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை ஒன்று சேர்ந்து அனைவரும் நேரடியாக அனுபவிக்கலாம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் நிலை உயர பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பம், கிராமம், நகரம், மாநிலம், நாடு என்ற நிலையில் சமுதாயம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். 

இந்த ஆட்சியில் முதலமைச்சரின் தகுந்த அறிவுரையின் படி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மேலும் சிறப்பு செய்யும் விதமாக “முதலமைச்சர் கோப்பை” போட்டிகள் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 

வருகின்ற நாட்களில் சர்வதேச அளவிலான ஹாக்கி மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. “நான் என்று மட்டும் இல்லாமல் நாம் என்ற உணர்வுடன்” அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு முன்னேற அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும் என்பதை வேண்டுகோளாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

சர்வதேச ஸ்குவாஸ் போட்டி – 2023 நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நிதியுதவியாக முதற்கட்டமாக ரூபாய் 1.50 கோடிக்கான காசசோலையினை தமிழ்நாடு ஸ்குவாஷ் இராக்கெட் அசோசியேசன் சேர்மன் சாம்பியன் ஷிப் கமிட்டி என். இராமச்சந்திரனிடம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் அமைச்சர் உதயநிதி சர்வதேச ஸ்குவாஷ் போட்டி-2023, பனியனை (T-SHIRT) அறிமுகப்படுத்தினார்.

ஸ்குவாஷ் உலகக் கோப்பையின் வரலாறு

“ஸ்குவாஷ் உலகக் கோப்பை” 1996இல் மலேசியாவில் அதன் தொடக்கப் பதிப்பில் இருந்து ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் எகிப்து அடுத்தடுத்த பதிப்புகளில் வெற்றி பெற்றன.

ஸ்குவாஷ் உலகக் கோப்பையின் விதிகள்:

• போட்டி வடிவம்: உலகக் கோப்பை இரண்டு பிரிவு (Pool) மற்றும் ஒரு நாக் அவுட் கட்டத்தைக் கொண்டிருக்கும்.

• குழு அமைப்பு: டைகள் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கொண்ட அணிகளால் போட்டியிடப்படும்.

• விளையாடும் வரிசை: பெண் #2, ஆண் #1, பெண் #1, ஆண் #2 அல்லது ஆண் #2, பெண் #1, ஆண் #1, பெண் #2 நாணய சுழற்சியில்.

• மேட்ச் ஸ்கோரிங்: அனைத்து போட்டிகளும் 5 கேம்களில் இருந்து 7 புள்ளிகள் வரை சிறப்பாக விளையாடப்படும். 6-6 என, ஆட்டம் இன்னும் 7 புள்ளிகளுக்கு விளையாடப்படும்.

• டை ஸ்கோரிங்: ஒரு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பின்வருமாறு புள்ளிகள் வழங்கப்படும்: பெண்கள் #1 & மேன் #1 - 2 புள்ளிகள்; பெண் #2 & ஆண் #2 - 1 புள்ளி. நாக் அவுட் கட்டத்தில், ஒரு சமநிலை ஏற்பட்டால், வெற்றி பெறும் அணி வெற்றி மற்றும் டையில் தோல்வியடைந்த ஆட்டங்களுக்கு இடையே உள்ள அதிக நேர்மறை வேறுபாட்டின் மூலம் தீர்மானிக்கப்படும்.

அட்டவணை

பிரிவு நிலை (Pool Stage)

• 13, 14 & 15 ஜூன் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் - காலை 10.30, மதியம் 1, மாலை 3.30 & மாலை 6 (4 போட்டிகள்)

நாக் அவுட் நிலை

• ஜூன் 16 இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் (பிளே-ஆஃப் போட்டிகள்) -காலை 10.30, மதியம் 1 மணி (2 போட்டிகள்)

• ஜூன் 16 எக்ஸ்பிரஸ் அவென்யூவில் (அரையிறுதி) - மாலை 3.30 & மாலை 6 மணி

(2 போட்டிகள்)

• ஜூன் 17 இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் (பிளே-ஆஃப் போட்டிகள்) -காலை 10.30, மதியம் 1 மணி (2 போட்டிகள்)

• ஜூன் 17 எக்ஸ்பிரஸ் அவென்யூவில் (இறுதி) - மாலை 4 மணி (1 போட்டி)

 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி