தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Women's Junior Asia Cup: முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்றது ஹாக்கி ஜூனியர் மகளிர் அணி

Women's Junior Asia Cup: முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்றது ஹாக்கி ஜூனியர் மகளிர் அணி

Manigandan K T HT Tamil

Jun 11, 2023, 10:22 PM IST

google News
Hockey India: இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுடன் மோதியது. இன்றைய பரபரப்பான பைனல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. (PTI)
Hockey India: இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுடன் மோதியது. இன்றைய பரபரப்பான பைனல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

Hockey India: இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுடன் மோதியது. இன்றைய பரபரப்பான பைனல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை முதன்முறையாக வென்றது இந்திய ஜூனியர் ஹாக்கி அணி.

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுடன் மோதியது. இன்றைய பரபரப்பான பைனல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

8வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடந்தது.

இன்று பிற்பகல 2.30 மணிக்கு தொடங்கிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணியினர் சிறப்பாக விளையாடினர். அன்னு 22 வது நிமிடத்திலும், நீலம் 41வது நிமிடத்திலும் கோல் போட்டு இந்தியாவை வெற்றி பெறச் செய்தனர்.

தென்கொரியா ஒரே ஒரு கோல் மட்டுமே பதிவு செய்து தோல்வியைத் தழுவியது.

ஜூனியர் ஹாக்கி அணியின் வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சமும், துணைப் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா நிர்வாகம் அறிவித்தது.

ஜூனியர் ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியனான இந்திய அணியினருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்து மழை குவிந்து வருகிறது.

ஆசிய கோப்பை போட்டியில் இந்திய ஜூனியர் அணி இறுதி ஆட்டத்தில் அடியெடுத்து வைத்தது இதுவே இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2012ம் ஆண்டில் 2வது இடம் பிடித்திருந்தது.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததன் மூலம், இந்திய அணி வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் சிலியில் நடைபெறும் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கும் நேரடியாக தகுதி பெற்றுவிட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி