Arshad Nadeem : ‘கிரிக்கெட் to ஈட்டி எறிதல்.. ஊரே கொடுத்த நன்கொடையில் பயணம்..’ தங்கம் வென்ற நதீமின் கதை!
Aug 09, 2024, 12:21 PM IST
Arshad Nadeem : அர்ஷத் இன்று இந்த இடத்திற்கு எப்படி வந்தார் என்று மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது ஆரம்ப நாட்களில் அவரது பயிற்சி மற்றும் நிகழ்வுகளுக்காக மற்ற நகரங்களுக்குச் செல்வதற்காக அவரது சக கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் தான் நன்கொடையாக பணம் கொடுத்தனர்.
Arshad Nadeem : ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் வாழ்க்கை பயணம், பாரிஸில் அவரது ஆட்டத்தைப் போலவே வியப்பானது. பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த நதீம், ஈட்டி எறிதல் விளையாட்டில் சேரும் முன்பு, மாநில அளவில் வயதுக்குட்பட்ட கிரிக்கெட் விளையாடினார். ஆனால் அவர் கிரிக்கெட் விளையாட்டை மாற்றி ஈட்டி எறிதலுக்கு வந்தது தான் இன்று அவருக்கு தங்கம் பெற்று தந்துள்ளது. 2022 இல் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நதீமிற்கு திருப்புமுனை ஏற்பட்டது.
அங்கு ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பாகிஸ்தான் தடகள வீரர் என்ற பெருமையைப் நதீம் பெற்றார். இந்த வெற்றியானது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு 56 ஆண்டுகால பதக்க வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதே நிகழ்வில் அவரது தனிப்பட்ட சிறப்பாக 90.18 மீட்டர் எறிந்து, அவரின் அடுத்தடுத்த பயணத்திற்கு தூண்டுகோளாக இருந்தது.
கூகுள் ட்ரெண்டிங்கில் நீதிம் அர்ஷித்
நன்கொடை பணத்தில் தொடர்ந்து பயணம்
நதீம் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அவரால் ஒலிம்பிக் போட்டிக்கு பயணிக்கவும், எறிவதற்கான ஈட்டி வாங்கவும் கூட பணம் இல்லை என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அது தான் உண்மை. ஆனால், அதே நேரத்தில் அவருக்காக அவரது கிராமமே உதவியது. இது பற்றி நதீமின் தந்தை முஹம்மது அஷ்ரஃப் கூறியதாவது: ‘‘அர்ஷத் இன்று இந்த இடத்திற்கு எப்படி வந்தார் என்று மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது ஆரம்ப நாட்களில் அவரது பயிற்சி மற்றும் நிகழ்வுகளுக்காக மற்ற நகரங்களுக்குச் செல்வதற்காக அவரது சக கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் தான் நன்கொடையாக பணம் கொடுத்தனர்,’’ என்றார். இதோ போல, சரியான ஊட்டச்சத்து உணவுகளை கூட பெற முடியாத அளவிற்கு அவரின் ஏழ்மை நிலை இருந்துள்ளது.
காயங்களும்.. அடுத்தடுத்து துன்பங்களும்!
சவால்களை சந்திக்காமல், இந்த வெற்றி சாத்தியமில்லை என்பார்கள். அப்படி ஒரு சவால்கள் தான் நதீம் வசம் இருந்தன. 2021 இல், ஈரானில் நடந்த ஒரு போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும், போட்டியில் பங்கேற்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக அறுவை சிகிச்சை கூட அவர் செய்ய மறுத்துள்ளார். இந்த பின்னடைவு இருந்தபோதிலும், அவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பங்கேற்றார். அதன் பின்னர் பயிற்சியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. 2022 உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளுக்குப் பிறகுதான் நதீம் இறுதியாக இரண்டு காயங்களுக்கும் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
ஒலிம்பிக் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட் செய்திகள் மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்.
டாபிக்ஸ்