தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl: வெற்றிக் கணக்கைத் தொடங்கியது சேலம் அணி-திருச்சி 2வது தோல்வி

TNPL: வெற்றிக் கணக்கைத் தொடங்கியது சேலம் அணி-திருச்சி 2வது தோல்வி

Manigandan K T HT Tamil

Jun 18, 2023, 06:36 PM IST

google News
Trichy vs Salem Spartans: சேலம் அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது. ( @TNPremierLeague)
Trichy vs Salem Spartans: சேலம் அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது.

Trichy vs Salem Spartans: சேலம் அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 7வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணியை வீழ்த்தியது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்.

இது அந்த அணிக்கு முதல் வெற்றியாகும். அதேநேரம், திருச்சி அணிக்கு தொடர்ச்சியாக 2வது தோல்வி ஆகும்.

டாஸ் வென்று திருச்சி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்தது. 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சேலம் அணி, 15.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

சேலம் அணியின் கவுசிக் காந்தி அபாரமாக விளையாடி 32 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். பிற வீரர்கள் ஓரளவுக்கு ஸ்கோரை திரட்டி அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தனர்.

அதிகபட்சமாக திருச்சி வீரர் காட்சன் 3 விக்கெட்டுகளையும் கே. ஈஸ்வரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருச்சி வீரர் நடராஜன் இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை.

சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஓபனிங் பேட்ஸ்மேனாக கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜு களமிறங்கினார். ஆனால், அவர் 6 ரன்னில் நடையைக் கட்டினார்.

மற்றொரு தொடக்க வீரரான ஜாஃபர் ஜமால் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார்.

பின்னர் வந்த பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழக்க திருச்சி அணி தள்ளாடியது.

பின்னர் வந்த விக்கெட் கீப்பர் மணி பாரதி 40 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.

ஆண்டனி தாஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க, மணி பாரதி, கணேஷ் மூர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சேலம் தரப்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டுகளையும், சன்னி சாந்து, சச்சின் சும்ரா, கணேஷ் மூர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ரவி கார்த்திகேயன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இவ்வாறாக திருச்சி அணி 20 ஓவர்களில் 140 ரன்களை எடுத்தது.

சொந்த மாவட்டமான சேலம் அணிக்கு எதிராக யார்க்கர் மன்னன் நடராஜன் களமிறங்க இருப்பதால் அவரது ஆட்டம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

முதல் ஆறு போட்டிகள் கோவையில் நடைபெற்ற நிலையில், இந்த வாரத்தில் வரும் வியாழக்கிழமை வரை மொத்தம் 7 போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி