தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Viral Vidoe: தூக்கத்தை கெடுத்த வார்னர்..வைரலாகும் லாபுஷானின் வீடியோ!

Viral Vidoe: தூக்கத்தை கெடுத்த வார்னர்..வைரலாகும் லாபுஷானின் வீடியோ!

Karthikeyan S HT Tamil

Jun 10, 2023, 12:43 PM IST

google News
Labuschagne: வார்னர் விக்கெட் போனதுகூட தெரியாமல் பெவிலியனில் தூங்கிக் கொண்டிருந்த லாபுஷானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Labuschagne: வார்னர் விக்கெட் போனதுகூட தெரியாமல் பெவிலியனில் தூங்கிக் கொண்டிருந்த லாபுஷானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Labuschagne: வார்னர் விக்கெட் போனதுகூட தெரியாமல் பெவிலியனில் தூங்கிக் கொண்டிருந்த லாபுஷானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து 318 ரன்கள் பின்தங்கி இருந்தது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. முதல் இன்னிங்கில் முன்னிலை பெற்ற உற்சாகத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா.

டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர். இதில், முகமது சிராஜ் வீசிய 3.3வது ஓவரில் டேவிட் வார்னர், விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்க வேண்டிய லாபுஷான் பெவிலியனில் சேரில் உட்கார்ந்து சற்று கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

வார்னர் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் சத்தத்தால் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்த லாபுஷான், வார்னர் ஆட்டமிழந்ததை அறிந்து உடனடியாக பேட்டிங் செய்ய களமிறங்கினார். வார்னர் விக்கெட் போனதுகூட தெரியாமல் பெவிலியனில் தூங்கிக் கொண்டிருந்த லாபுஷானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

3-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்து, 296 ரன் முன்னிலை பெற்றிருக்கிறது. இன்று ஆஸ்திரேலியா விரைவாக ரன் சேர்க்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்படலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி