Tennis: மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல டென்னிஸ் வீரர்-காரணம் என்ன?
Jun 14, 2023, 04:25 PM IST
Australia: கிர்கோயிஸ் நெட்பிளிக்ஸ் ஆவணப் படத் தொடரில் இத்தகவலை தெரிவித்துள்ளதார் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
2019 விம்பிள்டன் போட்டியில் கிர்கோயிஸ் 2வது சுற்றில் ரஃபேல் நடாலிடம் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
கிர்கோயிஸ் நெட்பிளிக்ஸ் ஆவணப் படத் தொடரில் இத்தகவலை தெரிவித்துள்ளார் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா என்று உண்மையிலேயே யோசித்துக் கொண்டிருந்தேன் என்று கிர்கோயிஸ் கூறியிருக்கிறார்.
விம்பிள்டனில் தோற்றேன். நான் கண்விழித்தேன், என் அப்பா கட்டிலில் உட்கார்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். அதுதான் எனக்கு பெரிய எச்சரிக்கை மணி என நான் நினைத்தேன், சரி, என்னால் இதை தொடர்ந்து செய்ய முடியாது. எனது பிரச்சனைகளைக் கண்டறிய நான் லண்டனில் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்ந்தேன்.
நான் முற்றிலும் மீண்டுவிட்டேன். எல்லாவற்றிலும் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன், நான் ஒரு கணத்தை கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
உங்கள் முழு திறனையும் அடைந்து புன்னகைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த வாழ்க்கை அழகானது.
நான் குடித்துக் கொண்டிருந்தேன். போதைப்பொருளைப் பயன்படுத்தினேன். என் குடும்பத்துடனான எனது உறவை இழந்தேன். எனது நெருங்கிய நண்பர்கள் அனைவரையும் தள்ளி வைத்துவிட்டேன். தற்போது மீண்டு விட்டேன் என்று கிர்கோயிஸ் குறிப்பிட்டுள்ளார் என்று அந்த செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது.
28 வயதாகும் கிர்கோயிஸ், ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் பிறந்தார். கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் பைனல் வரை முன்னேறினார்.
ஆஸ்திரேலியன் ஓபனில் 2015இல் காலிறுதி வரையிலும், பிரெஞ்சு ஓபனில் 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் 3வது சுற்று வரையிலும் முன்னேறினார்.
கடந்த ஆண்டு யுஎஸ் ஓபனிலும் கிர்கோயிஸ் காலிறுதி வரை முன்னேறினார்.
இதுவரை கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட தொடரில் அவர் சாம்பியன் ஆனதில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்