தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Olympic Medalist: கர்ப்பிணியாக இருந்த தடகள வீராங்கனை உயிரிழந்தது எப்படி?-பிரேத பரிசோதனை அறிக்கையில் விளக்கம்

Olympic Medalist: கர்ப்பிணியாக இருந்த தடகள வீராங்கனை உயிரிழந்தது எப்படி?-பிரேத பரிசோதனை அறிக்கையில் விளக்கம்

Manigandan K T HT Tamil

Jun 13, 2023, 05:06 PM IST

google News
Olympic Games: 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் 4*100 தொடர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவிற்காக தங்கம் வென்று சாதனை படைத்தவர். (AP)
Olympic Games: 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் 4*100 தொடர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவிற்காக தங்கம் வென்று சாதனை படைத்தவர்.

Olympic Games: 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் 4*100 தொடர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவிற்காக தங்கம் வென்று சாதனை படைத்தவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான தடகள வீராங்கனை டோரி போவி உயிரிழந்தபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குழந்தை பிறப்பில் இருந்த பிரச்சனைகள் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பிறந்த டோரி, கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி காலமானார்.

2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் 4*100 தொடர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவிற்காக தங்கம் வென்று சாதனை படைத்தவர்.

ரியோ டி ஜெனிரோவில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், அதே போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்றவர் டோரி.

ஒரே ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தியவர்.

2016 உலக சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், அதே போட்டியில் 4*100 தொடர் ஓட்டத்தில் தங்கமும் வென்றார்.

2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்று அசத்தினார்.

மே 2, 2023 அன்று, போவி பல நாட்களாக காணப்படவில்லை என்ற புகாரை அடுத்து, அதிகாரிகள் புளோரிடாவின் ஆரஞ்சு கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு அவர் இறந்து கிடந்தார். இவருக்கு அப்போது வயது 32. கர்ப்பமாக இருந்தார்.

அவர் ஏப்ரல் 23, 2023 அன்று இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்து. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகளின்படி, போவி பிரசவ சிக்கல்களால் இறந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இவரது மறைவு அமெரிக்க விளையாட்டு உலகை சோகத்தில் தள்ளியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி