தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Eng Vs Aus: ரூட் சதம் - முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இங்கிலாந்து

Eng vs Aus: ரூட் சதம் - முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இங்கிலாந்து

Jun 17, 2023, 12:14 AM IST

google News
ஜோ ரூட் சதம், ஆஸ்திரேலியா ஸ்பின்னர் லயன் மிரட்டல் பவுலிங், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் என ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில் பல சர்ப்ரைஸான விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. (Action Images via Reuters)
ஜோ ரூட் சதம், ஆஸ்திரேலியா ஸ்பின்னர் லயன் மிரட்டல் பவுலிங், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் என ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில் பல சர்ப்ரைஸான விஷயங்கள் நிகழ்ந்துள்ளன.

ஜோ ரூட் சதம், ஆஸ்திரேலியா ஸ்பின்னர் லயன் மிரட்டல் பவுலிங், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் என ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில் பல சர்ப்ரைஸான விஷயங்கள் நிகழ்ந்துள்ளன.

உலக கிரிக்கெட்டில் மிகப் பெரிய மோதலாக பார்க்கப்படும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிமிங்காமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் முடிவதற்குள்ளாகவே முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இந்த போட்டியின் முதல் பந்திலேயே இங்கிலாந்து அணி வீரர் கிராவ்லி பவுண்டரியுடன் தொடங்கினார். அதே வேகத்தில் இங்கிலாந்து வீரர்கள் பேட் செய்து விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் சதமடித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். 118 ரன்கள் எடுத்திருக்கும் ரூட், 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அடித்துள்ளார். இன்றைய போட்டியில் ரூட் தனது 30வது சதத்தை பதிவு செய்தார்.

இவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ 78 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். 78 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினார்கள். குறிப்பாக ஸ்காட் போலாந்து ஓவரை குறிவைத்து தாக்கினார்கள். 14 ஓவர்கள் வீசிய அவர் மெய்டன் எதுவும் இல்லாமல் 86 ரன்கள் வாரி வழங்கினார். டெஸ்ட் போட்டியில் ஒவருக்கு 6 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். இருப்பினும் ஆறுதலாக அவருக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

வேகப்பந்து வீச்சாளர்களில் ஹசில்வுட் 2. க்ரீன் ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஸ்பின்னரான நாதன் லயன் ஓவரில் ரன்கள் குவித்தபோதிலும், அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி