WTC 2023: ‘முடிவில்லாமல் உன்னை நேசிக்கிறேன்’ ரஹானே மனைவி உருக்கமான பதிவு!
Jun 11, 2023, 05:35 AM IST
Ajinkya Rahane: ‘உங்கள் அசைக்க முடியாத குழு உணர்வை நினைத்து நான் என்றென்றும் பெருமைப்படுகிறேன். முடிவில்லாமல் உன்னை நேசிக்கிறேன்’
‘‘உங்கள் விரல் வீங்கியிருந்தாலும், உங்கள் மனநிலையைப் பாதுகாக்க ஸ்கேன் செய்ய மறுத்து, நம்பமுடியாத தன்னலமற்ற தன்மையையும் உறுதியையும் வெளிப்படுத்தி, பேட்டிங்கில் கவனம் செலுத்தினீர்கள். அசைக்க முடியாத நெகிழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்புடன், நீங்கள் கிரீஸில் உங்கள் இடத்தைப் பிடித்தீர்கள், எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளித்தீர்கள். உங்கள் அசைக்க முடியாத குழு உணர்வை நினைத்து நான் என்றென்றும் பெருமைப்படுகிறேன். முடிவில்லாமல் உன்னை நேசிக்கிறேன்,’’ரஹானே மனைவியின் உருக்கமான பதிவு தான் இது.
இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானேவின் மனைவி ராதிகா ரஹானே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 2023 இன் 3-வது நாளில், ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டும் ஸ்கேன் செய்ய மறுத்த தன் கணவர் ரஹானேவின் மனநிலையைப் பற்றிய இதயப்பூர்வமான தகவலை பகிர்ந்துள்ளார்.
WTC இறுதிப் போட்டியின் 2 வது நாளில் இந்தியாவின் பேட்டிங்கின் 22 வது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் மோசமான பவுன்சரால் ரஹானே அவரது வலது கையின் ஆள்காட்டி விரலில் தாக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அவரது மனைவி ஒரு பதிவில், “உங்கள் விரல் வீங்கிய போதிலும், உங்கள் மனநிலையைப் பாதுகாக்க ஸ்கேன் செய்ய மறுத்து, பேட்டிங்கில் கவனம் செலுத்தி, நம்பமுடியாத தன்னலமற்ற தன்மையையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். அசைக்க முடியாத நெகிழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்புடன், நீங்கள் கிரீஸில் உங்கள் இடத்தைப் பிடித்தீர்கள். நாங்கள் அனைவரும். உங்கள் அசைக்க முடியாத குழு உணர்விற்காக நான் என்றென்றும் பெருமைப்படுகிறேன், என் நெகிழ்ச்சியான துணை. முடிவில்லாமல் நேசிக்கிறேன்!”
என்று உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார் அவருடைய மனைவி. அடிபட்ட போது ரஹானே கடுமையான வலியில் இருந்தார். ரஹானே காயத்தின் அளவை சரிபார்க்க பிசியோ வந்தார். அவரை ஸ்கேன் எடுக்க அவர் பரிந்துரைத்த போது, ரஹானே அதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து களத்தில் இருந்தார்.
மூன்றாம் நாளில் 129 பந்துகளில் 89 ரன்களை விளாசி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் கடினமான ஸ்பெல்லை முறியடித்தார். இதன் மூலம், தன்னுடைய தேர்வை அவர் நியாயப்படுத்தினர். அணியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகவும் அது இருந்தது.
"கடினமான வலி தான். ஆனால் அதை என்னால் சமாளிக்க முடியும். அது பேட்டிங்கை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சியாக இருந்தது. 320-330 ரன்களைப் பெறுவோம் என்று எதிர்பார்த்தோம். ஒட்டுமொத்தமாக எங்களுக்கு நல்ல நாளாக தான் இருந்துது. பந்துவீச்சு வாரியாக நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம், அனைவரும் புத்துணர்வுடன் விளையாடினோம்’’ என்று போட்டி முடிவுக்குப் பின் அஜிங்க்யா ரஹானே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்