தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ajinkya Rahane: 'வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவர் ரஹானே'-எம்.எஸ்.கே.பிரசாத்

Ajinkya Rahane: 'வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவர் ரஹானே'-எம்.எஸ்.கே.பிரசாத்

Manigandan K T HT Tamil

Jun 04, 2023, 12:21 PM IST

google News
Word Test Championship Final: 34 வயதாகும் ரஹானே, 82 டெஸ்ட்களில் விளையாடி 4,931 ரன்களை விளாசியிருக்கிறார்.
Word Test Championship Final: 34 வயதாகும் ரஹானே, 82 டெஸ்ட்களில் விளையாடி 4,931 ரன்களை விளாசியிருக்கிறார்.

Word Test Championship Final: 34 வயதாகும் ரஹானே, 82 டெஸ்ட்களில் விளையாடி 4,931 ரன்களை விளாசியிருக்கிறார்.

18 மாதங்களுக்குப் பிறகு அஜிங்ய ரகானே இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவர் விளையாடவுள்ளார்.

ஜூன் 7ம் தேதி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து ஜெயித்தது.

ரஹானேவின் ஆட்டத்திறன் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியதாவது:

வெளிநாட்டு மண்ணில் விளாசக் கூடியவர் ரஹானே. அவரிடம் அந்த ரெக்கார்டு இருக்கிறது. அவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபடுவார். அதை செய்ய தவறியதால் கடந்த 18 மாதங்களாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனார். அதேநேரம், அந்த காலகட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தினார். அதில் அதிக ரன்களையும் விளாசினார்.

ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருந்தால், அவரை எடுத்திருக்கலாம்.

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ரஹானேவுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டால் நாம் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும் என்றார் பிரசாத்.

2016-2020 வரை இந்திய வீரர்கள் தேர்வுக் குழுவை பிரசாத் வழிநடத்தினார்.

தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர் சரண்தீப் சிங் கூறுகையில், "அவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் தனது வாய்ப்பிற்காக காத்திருந்தார், ஸ்ரேயாஸின் காயத்திற்குப் பிறகு, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் அவர் பந்தை டைமிங் செய்த விதம் பார்க்க நன்றாக இருந்தது. அவருடைய அனுபவத்தை நாம் பயன்படுத்த வேண்டும், அவர் நல்ல ஸ்கோர் அடித்தால் நாம் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும்" என்றார்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்காக 19 பந்துகளில் அரை சதம் விரட்டினார் ரஹானே.

இந்த ஐபிஎல் சீசனில் ரஹானே 16 ஆட்டங்களில் விளையாடி 326 ரன்களை குவித்தார். 2 அரை சதங்களை அவர் விளாசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி