தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2023: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் யோசனைக்கு Acc விரைவில் ஒப்புதல்?

Asia Cup 2023: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் யோசனைக்கு ACC விரைவில் ஒப்புதல்?

Manigandan K T HT Tamil

Jun 11, 2023, 03:14 PM IST

google News
Asian Cricket Council (ACC): இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Asian Cricket Council (ACC): இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Asian Cricket Council (ACC): இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ஹைபிரிட் மாடலில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாடலில், இலங்கையில் நடைபெறும் இந்தியாவின் போட்டிகளைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தான் நடத்தும். இந்தியா பைனலுக்கு முன்னேறினால் அந்தப் போட்டியும் இலங்கையில் நடக்கும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் இந்த வார இறுதியில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1 முதல் 17ம் தேதிக்குள் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகள் லாகூர் நகரில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானுக்கு சென்று விளையாட பிசிசிஐ மறுப்பு தெரிவித்து வருகிறது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த ஹைபிரிட் மாடல் யோசனையை அறிவித்தது.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் வராது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முரண்டு பிடித்தது.

அதைத் தொடர்ந்து பொதுவான இடத்தில் போட்டி நடத்த நாங்கள் ரெடி என பாகிஸ்தான் பச்சை கொடி காட்டியது.

முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தை பொதுவான இடமாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறியது.

ஆனால், வங்கதேச அணி செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சூரியன் சுட்டெரிக்கும் என தெரிவித்தது.

முன்னதாக, கடந்த ஆண்டு பிசிசிஐ கவுரச் செயலர் ஜெய் ஷா, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடாது என கூறியிருந்தார்.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் உறவுகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் உறவில் விரிசல் விழுந்துள்ளது. எனினும், ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி வருகின்றன.

நேபாளம், பாகிஸ்தான், இந்தியா ஒரு குரூப்பிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றொரு குரூப்பிலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் உள்ளன.

இங்கிலாந்தில் ஜூன் 7ம் தேதி தொடங்கி நடந்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி