தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  எலும்பு வலிமை முதல் எடை குறைப்பு வரை ஏராளமான நன்மைகள் தரும் வாழைப்பழ தேநீர்

எலும்பு வலிமை முதல் எடை குறைப்பு வரை ஏராளமான நன்மைகள் தரும் வாழைப்பழ தேநீர்

Aug 05, 2022, 11:52 PM IST

வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவதும், ஜூஸ், ஸ்மூத்திகளில் சேர்த்து பருகுவதையும் வழக்கமாக கொண்டுள்ளோம். வாழைப்பழத்தை வைத்து சில உணவுகளைும் தயார் செய்து சாப்பிடலாம். வாழைப்பழ தேநீராக தயாரித்து பருகுவதன் மூலம் எலும்பு வலிமை முதல் எடை குறைப்பு வரை பல்வேறு உடல் நல நன்மைகளை கிடைக்கின்றன. 

  • வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவதும், ஜூஸ், ஸ்மூத்திகளில் சேர்த்து பருகுவதையும் வழக்கமாக கொண்டுள்ளோம். வாழைப்பழத்தை வைத்து சில உணவுகளைும் தயார் செய்து சாப்பிடலாம். வாழைப்பழ தேநீராக தயாரித்து பருகுவதன் மூலம் எலும்பு வலிமை முதல் எடை குறைப்பு வரை பல்வேறு உடல் நல நன்மைகளை கிடைக்கின்றன. 
வாழைப்பழத்தை அப்படியே உரித்து சாப்பிடுவது அல்லது உணவுகள், பழரசங்களோடு சேர்ந்து சாப்பிடுவதை பலரும் வழக்கமாக கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் வாழைப்பழத்தை தேநீராக தயார் செய்து பருகுவது பற்றி பெரும்பாலோனருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தனித்துவம் மிக்க இந்த தேநீர் பருகுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெருவதோடு, சிறந்த வாழ்க்கை முறையை அடையவும் உதவுகிறது
(1 / 8)
வாழைப்பழத்தை அப்படியே உரித்து சாப்பிடுவது அல்லது உணவுகள், பழரசங்களோடு சேர்ந்து சாப்பிடுவதை பலரும் வழக்கமாக கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் வாழைப்பழத்தை தேநீராக தயார் செய்து பருகுவது பற்றி பெரும்பாலோனருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தனித்துவம் மிக்க இந்த தேநீர் பருகுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெருவதோடு, சிறந்த வாழ்க்கை முறையை அடையவும் உதவுகிறது(Unsplash)
வாழைப்பழத்தில் தேநீர் எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் ஒன்று எடுத்து அதன் தோள் உரித்தோ அல்லது உரிக்கப்படாமலோ, பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அதில் பழத்தை வைத்து நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் வாழைப்பழத்தில் உள்ள மிச்ச கழிவுகளை நீக்கி பிளாக் டீ, பால் என விருப்பம் போல் ஒன்றில் வடிகட்டி கலந்து பருக வேண்டும்
(2 / 8)
வாழைப்பழத்தில் தேநீர் எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் ஒன்று எடுத்து அதன் தோள் உரித்தோ அல்லது உரிக்கப்படாமலோ, பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அதில் பழத்தை வைத்து நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் வாழைப்பழத்தில் உள்ள மிச்ச கழிவுகளை நீக்கி பிளாக் டீ, பால் என விருப்பம் போல் ஒன்றில் வடிகட்டி கலந்து பருக வேண்டும்(Unsplash)
வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான அளவில் நார்ச்சத்துகள் இருப்பதால் அவை செரிமானம் ஆவதற்கு கொஞ்சம் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி சாப்பிடுவது தடுக்கப்படுவதோடு, இந்த நிலை எடைகுறைப்புக்கு உதவியாக அமைகிறது
(3 / 8)
வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான அளவில் நார்ச்சத்துகள் இருப்பதால் அவை செரிமானம் ஆவதற்கு கொஞ்சம் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி சாப்பிடுவது தடுக்கப்படுவதோடு, இந்த நிலை எடைகுறைப்புக்கு உதவியாக அமைகிறது(Unsplash)
வாழைப்பழத்தில் அதிக அளவிலான மாங்கனீசு மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துகள் எலும்புகளின் வலிமை மேம்படித்து வலுவாக இருக்க உதவுகிறது
(4 / 8)
வாழைப்பழத்தில் அதிக அளவிலான மாங்கனீசு மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துகள் எலும்புகளின் வலிமை மேம்படித்து வலுவாக இருக்க உதவுகிறது(Unsplash)
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டசியம், மக்னீசியம் உடலில் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலின் தடை திரிபு மற்றும் வீக்கம் உணர்வின் அபாயத்தை தணிக்க உதவுகிறது
(5 / 8)
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டசியம், மக்னீசியம் உடலில் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலின் தடை திரிபு மற்றும் வீக்கம் உணர்வின் அபாயத்தை தணிக்க உதவுகிறது(Unsplash)
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்துகள் உடல் தமனிகள் மற்றும் நரம்புகளின் அழுத்தம் சமநிலைப்படுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது
(6 / 8)
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்துகள் உடல் தமனிகள் மற்றும் நரம்புகளின் அழுத்தம் சமநிலைப்படுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது(Unsplash)
வாழைப்பழத்தில் உள்ல ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன்மூலம் விழித்திரையில் மாகுலர் சிதைவு, கண்புரை மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது, இதனால் கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது
(7 / 8)
வாழைப்பழத்தில் உள்ல ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன்மூலம் விழித்திரையில் மாகுலர் சிதைவு, கண்புரை மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது, இதனால் கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது(Unsplash)
வாழைப்பழ தேநீரில் டோபாமைன் மற்றும் செரோடோனின் இடம்பெற்றுள்ளது. இந்த ஹார்மோன்கள் மனஅழுத்தம் ஏற்படாமல் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது
(8 / 8)
வாழைப்பழ தேநீரில் டோபாமைன் மற்றும் செரோடோனின் இடம்பெற்றுள்ளது. இந்த ஹார்மோன்கள் மனஅழுத்தம் ஏற்படாமல் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது(Unsplash)
:

    பகிர்வு கட்டுரை