தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tvs Jupiter Classic: பல்வேறு புதிய அம்சங்களை கொண்ட டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக்

TVS Jupiter Classic: பல்வேறு புதிய அம்சங்களை கொண்ட டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக்

Sep 23, 2022, 03:13 PM IST

ஐந்து மில்லியன் ஜூபிடர் மோட்டர் சைக்கிள்கள் விற்பனை ஆகி சாலையில் பயணித்துக்கொண்டிருப்பதை கொண்டாடும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் புதிய ஜூபிடர் கிளாசிக் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐந்து மில்லியன் ஜூபிடர் மோட்டர் சைக்கிள்கள் விற்பனை ஆகி சாலையில் பயணித்துக்கொண்டிருப்பதை கொண்டாடும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் புதிய ஜூபிடர் கிளாசிக் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐந்து மில்லியன் ஜூபிடர் மோட்டர் சைக்கிள்கள் விற்பனை ஆகி சாலையில் பயணித்துக்கொண்டிருப்பதை கொண்டாடும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் புதிய ஜூபிடர் கிளாசிக் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் நன்கு விற்பனை செய்யப்பட்ட மாடலான டிவிஎஸ் ஜூபிடர் மோட்ட சைக்களின் புதிய வேரியண்டாக ஜூபிடர் கிளாசிக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ பிளஷர் ப்ளஸ், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஆகிய வண்டிகளுக்கு போட்டியாக அமைந்திருந்த இந்த ஜூபிடர் கிளாசிக் வண்டியிஸ் எக்ஸ் ஷோரூம் விலையானது ரூ. 85, 866 என உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

இதுவரை 5 மில்லியன் ஜூபிடர் பைக்குகள் விற்பனையாகி இருப்பதை கொண்டாடும் விதமாக ஜூபிடர் கிளாசிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மோட்டர் சைக்களில் வெளிப்புற லுக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்றபடி மெக்கானிக்கல் அம்சங்களை பொறுத்தவரை பொரும்பாலான விஷயங்கள் ஜூபிடர் மோட்டர் சைக்கிள் போன்றே அமைந்துள்ளது.

ஜூபிடர் கிளாசிக் வண்டிகள் 109.7CC சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், எரிபொருளை பெறுவதற்கான இன்ஜெக்‌ஷனை பெற்றுள்ளது. 7.47PS அதிகபட்ச சக்தியையும், 8.4 Nm முறுக்கை விசையையும் உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

தோற்ற மாற்றத்தை பொறுத்தவரை கருப்பு நிறத்திலான தீம், 3டி லோகோ கண்ணாடிகள், ஹேண்டில்பார் எண்ட் போன்றவை கவனம் பெறும் விதமாக அமைந்துள்ளது. டைமண்ட் கட் அலாய் வீல்கள், மெல்லிய லெதர் தோல்களால் ஆன பிரீமியம் சீட்கள் ஆகியவை கூடுதல் சிறப்பு அம்சங்களாக உள்லன.

ஜூபிடர் கிளாசிக் மைஸ்டிக் கிரே, ரீகல் பர்பில் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அனைத்தையும் ஒரே முறை லாக் செய்யும் வசதி, எஞ்சின் ஆன் ஆப், மொபைல் போன் சார்ஜ் செய்வதற்கு ஏற்பு யுஎஸ்பி சார்ஜர் போன்றவையும் உள்ளது.

முன் பகுதி மற்றும் பின் பகுதி ஆகிய இரண்டு இடங்களிலும் பிரேக்கிங் அமைப்பு செய்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டூயூப்லெஸ் டயர்களை பெற்றுள்ள ஜூபிடப் கிளாசிக், டெலாஸ்கோபிக் போர்க்ஸ் ஆதரவுடன் சஸ்பென்ஷன் பணிகளை மேற்கொள்கிறது.

இன்ஸ்ட்ரூமெண்டை பொறுத்தவரை Eco Mode, Power Mode ஆகிய இரண்டு மோடுகளில் வண்டி இயங்கும். எல்ஈடி ஹெட் லைட், சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர், எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர், குறைவான எரிபொருள் இன்டிகேஷன், யுடிலிட்டி பாக்ஸ், 21 லிட்டர் வரை தாரளமான பூட் ஸ்பேஸ் என பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.