தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பாஜக உயர் மட்டத்தில் அதிரடி மாற்றங்கள் உள்பட முக்கிய செய்திகள் (ஆக.17)

பாஜக உயர் மட்டத்தில் அதிரடி மாற்றங்கள் உள்பட முக்கிய செய்திகள் (ஆக.17)

Karthikeyan S HT Tamil

Aug 17, 2022, 05:57 PM IST

பாஜக உயர் மட்டத்தில் அதிரடி மாற்றங்கள், பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு அபராதம் உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
பாஜக உயர் மட்டத்தில் அதிரடி மாற்றங்கள், பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு அபராதம் உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

பாஜக உயர் மட்டத்தில் அதிரடி மாற்றங்கள், பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு அபராதம் உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

  • மெக்சிகோவை சேர்ந்த மரியா என்பவர் தனது உடலை 49 முறை அறுவை சிகிச்சை செய்து மாற்றி அமைத்துள்ளார்.
  • வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களில் உரிமை கோராமல் உள்ள நாற்பதாயிரம் கோடி ரூபாயை உரியவர்களிடம் உடனடியாக வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • கர்நாடகாவில் 5 வயது சிறுமியிடம், 15 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
  • ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.
  • இலங்கை துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பல் இருப்பது குறித்த கேள்விக்கு, “அதை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து, கண்காணித்து வருகிறோம்” என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பதிலளித்துள்ளார்.
  • பாஜகவின் தலைமை அமைப்பான நாடாளுமன்றக் குழுவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்களான நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
  • மகாராஷ்டிரத்தின் சட்ட மேலவைத் தலைவராக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
  • புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • ஆந்திரத்தில் அடுத்தடுத்து 3 கொலைகள் என தொடர் கொலையில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
  • மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவதும், தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இல்லை என்று தொடர்ந்து கேலி செய்வதும், மன ரீதியாக கொடுமைப்படுத்துவது ஆகும் என்று கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
  • தர நிர்ணய அளவை மீறி தயாரிக்கப்பட்ட குக்கர்களை ஆன்லைனில் விற்பனை செய்த பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
  • விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இஸ்லாமியப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • மகாராஷ்டிரா ராய்ப்பூரில் இருந்து நாக்பூர் நோக்கிச் சென்ற "பகத் கி கோத்தி" ரயில் அதிகாலை 4 மணியளவில், கோண்டியா நகருக்கு அருகே விபத்துக்குள்ளானதில் 50 பேர் காயமடைந்தனர்.
  • இலவசங்களை தடை செய்வது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
  • இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்து கழகமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்தை வாங்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
  • கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஓப்புதல் அளித்துள்ளது.
  • தில்லியில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Microsoft: ‘ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்’

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

டாபிக்ஸ்