தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Student Shot The Teacher: கண்டித்த ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்ட மாணவர்

student shot the teacher: கண்டித்த ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்ட மாணவர்

Sep 24, 2022, 11:09 PM IST

உத்திர பிரதேசத்தில் வகுப்பறையில் கண்டித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
உத்திர பிரதேசத்தில் வகுப்பறையில் கண்டித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

உத்திர பிரதேசத்தில் வகுப்பறையில் கண்டித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சீதாப்பூரில் உள்ள பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் இருக்கும் மாணவரைக் கண்டித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Microsoft: ‘ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்’

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

அதனால் ஆத்திரமடைந்த மாணவர் நாட்டுத் துப்பாக்கி எடுத்து வந்து அவரை மூன்று முறை சுட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளில், " மாணவர் கண்டித்த ஆசிரியரைத் துப்பாக்கிக் கொண்டு துரத்துகிறார். பின்னர் அந்த மாணவர் அவரை மூன்று முறை நாட்டுத் துப்பாக்கியால் சுடுகிறார். துப்பாக்கியை மாணவரிடம் இருந்து பிடுங்க முயற்சி செய்த ஆசிரியரைத் துப்பாக்கியின் பின்புறத்தைக் கொண்டு அந்த மாணவர் தாக்குகிறார். உடனே அருகிலிருந்தவர்கள் அந்த துப்பாக்கியைப் பிடுங்க முயற்சிக்கின்றனர். துப்பாக்கியுடன் அந்த மாணவர் தப்பி ஓடுகிறார்.

துப்பாக்கியுடன் தப்பி ஓடிய மாணவரை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாக்கப்பட்ட ஆசிரியர் தற்போது லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடலில் இருக்கும் முக்கிய பாகங்களில் காயங்கள் ஏற்படாத காரணம் தான் அந்த ஆசிரியர் உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து வந்த ஆசிரியர் கூறுகையில்,"ஒரு மாணவனை ஆசிரியர் கண்டுபிடிப்பது போல் சாதாரணமாக நான் கண்டித்தேன். ஆனால் அந்த மாணவர் இந்த அளவிற்கு ஆத்திரம் அடைவார் என நான் எதிர்பார்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.

டாபிக்ஸ்