தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Prime Minister Modi: பான் இந்தியா கட்சி பாஜக - பிரதமர் மோடி

Prime Minister Modi: பான் இந்தியா கட்சி பாஜக - பிரதமர் மோடி

Mar 28, 2023, 10:29 PM IST

குடும்ப அரசியல் அமைப்புகளுக்கு மத்தியில் பாஜக பான் இந்தியா கட்சியாக உருவெடுத்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடும்ப அரசியல் அமைப்புகளுக்கு மத்தியில் பாஜக பான் இந்தியா கட்சியாக உருவெடுத்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடும்ப அரசியல் அமைப்புகளுக்கு மத்தியில் பாஜக பான் இந்தியா கட்சியாக உருவெடுத்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் விரிவாக்கக் கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி உரையாற்றினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Microsoft: ‘ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்’

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

அப்போது பேசிய அவர்," பாரதிய ஜனதா கட்சி ஒரு சிறிய அமைப்பாகத் தொடங்கப்பட்டது. தற்போது உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்றாக உயர்ந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தொண்டர்களின் அர்ப்பணிப்பும், தியாகமும் தான்.

பாரதிய ஜனதா கட்சி இரண்டு மக்களவை உறுப்பினர்களுடன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு அது 303 எட்டியது. இப்போது இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களிலும் 50 விழுக்காடுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வருகிறது.

குடும்பங்களால் இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்புகளுக்கு இடையில் பான் இந்தியா கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்து வருகிறது. நாடு முழுக்க செல்வாக்கு மிக்க கட்சியாக விளங்கி வருகிறது. அப்படி நாடு முழுவதும் செல்வாக்கு உள்ள ஒரே பான் இந்தியா கட்சி பாரதிய ஜனதா கட்சி தான்.

பாரதிய ஜனதா கட்சி உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய கட்சியாக மட்டுமின்றி, மிகப்பெரிய எதிர்காலம் கொண்ட சிறந்த கட்சியாகவும் வளர்ந்துள்ளது. தற்போது நவீன மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது பாரதிய ஜனதா கட்சியின் ஒரே குறிக்கோள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கர்நாடகாவில் ராகுல் காந்தி, அனைத்து திருடர்களும் மோடி என்ற பொதுவான பெயரை இருக்கிறது எனப் பேசி இருந்தார்.

இதுகுறித்து தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு அவருக்குச் சிறைத் தண்டனை சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதேசமயம் ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனைக் குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசும்போது, குடும்பங்களால் இயக்கப்படும் அரசியல் அமைப்பு என சுட்டிக்காட்டி இருக்கிறார். இது இந்தியாவில் இருக்கும் எந்த கட்சியைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்பது அவருக்கே தெரிந்த ஒன்றாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்