தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mallikarjun Kharge: காங்கிரஸ் தலைவராகிறாா் மல்லிகார்ஜூன கார்கே

Mallikarjun Kharge: காங்கிரஸ் தலைவராகிறாா் மல்லிகார்ஜூன கார்கே

Karthikeyan S HT Tamil

Oct 19, 2022, 03:10 PM IST

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

புதுதில்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Microsoft: ‘ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்’

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடியாக போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை (அக்.17) நாடு முழுவதும் 65 இடங்களில் நடைபெற்றது.

காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து இன்று (அக்.19) காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார். மற்றொரு வேட்பாளரான சசி தரூர் 1,000 வாக்குகள் பெற்றிருந்தார்.

எண்ணப்பட்ட வாக்குகளில் 416 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியினஅ தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்