தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  30 ரூபாய் சம்பளம் முதல் இந்தியாவின் ஜனாதிபதி ஆனது வரை..டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

30 ரூபாய் சம்பளம் முதல் இந்தியாவின் ஜனாதிபதி ஆனது வரை..டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

Karthikeyan S HT Tamil

Dec 03, 2024, 07:18 AM IST

google News
டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக பணியாற்றினார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக விளங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளில் அவரை நினைவுகொள்வோம்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக பணியாற்றினார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக விளங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளில் அவரை நினைவுகொள்வோம்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக பணியாற்றினார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக விளங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளில் அவரை நினைவுகொள்வோம்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். தொண்டர்கள் இவரை ‘பாபுஜி’ என்று அன்புடன் அழைத்தனர். டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார்.

பிறப்பு

கடந்த 1884-ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் எனும் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாவீர சாகி, தாய் கமலேசுவரி தேவி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்கினார். 5 வயதில் ஒரு மவுல்வியிடம் பாரசீக மொழி கற்றார். சாப்ரா மாவட்டத்தில் தொடக்கக் கல்வியை முடித்தார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார்.

30 ரூபாய் உதவித்தொகை

கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற காரணத்திற்காக மாதம்தோறும் 30 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ச்சியாக, பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்தார். பணிபுரியும் போதே சட்டக்கல்லூரியில் மேற்படிப்பு படித்து முதல் மாணவனாக தங்க பதக்கம் பெற்று சிறந்து விளங்கியவர் ராஜேந்திர பிரசாத். சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிறந்த வழக்கறிஞரகாகவும் பணியாற்றி உள்ளார்.

அரசியல்

காந்தியின் அகிம்சை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நல்ல வருமானம் தந்த தனது வழக்கறிஞர் தொழிலை துறந்தார். தரையைத் துடைப்பது, கழிவறையைக் சுத்தம் செய்வது, பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். 1934 ஆம் ஆண்டு பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ ரூ.38 லட்சம் நிதி திரட்டினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

முதல் குடியரசுத் தலைவர்

1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராஜேந்திர பிரசாத் . 1962 வரை சுமார் 12 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். இந்திய குடியரசுத் தலைவர்களில் 2-வது முறையாக அந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்றவர்.

மறைவு

இந்தியக் குடியரசை திறம்படவும் உறுதியாகவும் வழிநடத்தியவர் என்று போற்றப்படும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார். 

மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக விளங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 140-வது பிறந்தநாளான இன்று (டிச.03) அவரை நினைவுகொள்வோம். அந்த உயரிய மனிதரை அவரை வணங்குவோம்..ஜெய்ஹிந்த்!

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி