தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ht Explainer : Where Can I Apply To Study Medicine If I Win Neet?

HT Explainer : மாணவர்களே தெரிந்துகொள்ளுங்கள்! நீட் தேர்வில் வென்றால் எங்கெல்லாம் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கலாம்?

Priyadarshini R HT Tamil

Jun 02, 2023, 01:45 PM IST

HT Explainer : இந்தாண்டு இந்தியா முழுவதும் நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கவுன்சிலிங் செயல்முறை எப்படி இருக்கும் என்று மாணவர்களுக்கு இந்தப்பதிவு விளக்குகிறது.
HT Explainer : இந்தாண்டு இந்தியா முழுவதும் நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கவுன்சிலிங் செயல்முறை எப்படி இருக்கும் என்று மாணவர்களுக்கு இந்தப்பதிவு விளக்குகிறது.

HT Explainer : இந்தாண்டு இந்தியா முழுவதும் நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கவுன்சிலிங் செயல்முறை எப்படி இருக்கும் என்று மாணவர்களுக்கு இந்தப்பதிவு விளக்குகிறது.

NEET (National Entrance Cum Eligibilty Test), இந்தியாவில் உள்ள மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Vistara: பைலட் பயிற்சியில் குறைபாடுகள்: விஸ்தாரா துணைத் தலைவரை இடைநீக்கம் செய்தது டிஜிசிஏ

Singapore Airlines: இந்திய தம்பதிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

NCR schools receive threats: டெல்லியில் குறைந்தது 50 பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல், உஷார் நிலையில் போலீஸார்

International Labour Day: தொழிலாளர் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும்.

இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது. 

இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் (முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இருந்தது) தான் உருவாக்கியது. முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி மற்றும் குஜராத்தி ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும். 2021-ல் இருந்து பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவிலான 15 சதவீத மருத்துவ ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் காப்பீட்டு மருத்துவக் கல்லூரி, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள், இத்தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

பிற மாநிலங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கும் அந்தந்த மாநில, பல்கலைக்கழக, நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டு, இத்தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மத்திய, மாநில அரசுகளின் பிற படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு தேவையெனில், இந்த தகுதித்தேர்வு மதிப்பெண்களை விதிமுறைகளின்படி பயன்படுத்திக்கொள்ள முடியும். கலந்தாய்வின்போது, தேவையான தகுதிகள், சுய உறுதிமொழி மற்றும் தேவையான ஆவணங்களை உரிய அதிகாரிகள் மற்றும் கல்லூரிகள் சரிபார்த்து, மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வேண்டும்.

டாபிக்ஸ்