தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Geetabenrabari: பணமழையில் நனைந்த கீதா பென் ரபாரி; ரூ. 4.50 கோடி நன்கொடை!

Geetabenrabari: பணமழையில் நனைந்த கீதா பென் ரபாரி; ரூ. 4.50 கோடி நன்கொடை!

Apr 13, 2023, 03:06 PM IST

பசுக்களைப் பாதுகாப்பதற்காக இவ்வளவு நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி" என கூறி உள்ளார்.
பசுக்களைப் பாதுகாப்பதற்காக இவ்வளவு நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி" என கூறி உள்ளார்.

பசுக்களைப் பாதுகாப்பதற்காக இவ்வளவு நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி" என கூறி உள்ளார்.

பிரபல குஜராத் பாடகி கீதா பென் ரபாரி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி உள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Haryana: ’ஹரியானாவில் பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸை ஆதரிக்க ரெடி!’ 10 எம்.எல்.ஏக்களை கொண்ட ஜேஜேபி கட்சி அறிவிப்பு!

Sam Pitroda row: ‘நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்’: பிரதமர் மோடி

Google Wallet for Android users in India: இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலட் இனி கிடைக்கும்!

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

குஜராத் மாநிலம் கட்ச் நகரில் உள்ள ராப்பரில் நேற்று இரவு கீதா பென் ரபாரி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியின் போது பாடகி கீதா பென் ரபாரியை ரசிகர்கள் பணத்தாலேயே அபிஷேகம் நடத்தினர். இந்நிலையில் கீதா ரபாரி மீது நோட்டு மழை பொழிந்த அந்த நிகழ்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை கீதா ரபாரியும் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் ரூ 4.50 கோடி நன்கொடை கிடைத்ததாக கீதா ரபாரி கூறி உள்ளார்.

மேலும் பசுக்களைப் பாதுகாப்பதற்காக இவ்வளவு நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி" என கூறி உள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில், அவர் மீது ரசிகர்கள் டாலர் மழையை பொழிந்தனர். அப்போது அவர் மீது ரூ.2.25 கோடி டாலர் பணமழை பொழிந்தது.

கீதா ரபாரி குஜராத்தின் கட்ச் தாப்பரில் பிறந்தார். அவர் தனது 10 ஆம் வகுப்பை முடிக்க ஜாம் நகரில் உள்ள ஜேஎன்வி பள்ளியில் பயின்றார். கீதா ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே பாட தொடங்கினார். ஆரம்பத்தில் கிராமவாசிகள் அடிக்கடி அவரை பாட அழைத்துள்ளனர். இப்படி ஆரம்பத்தில் பஜனைகள், நாட்டுப்புற கதைகள் சான்ட்வானி மற்றும் தியாரா ஆகியவற்றை பாடி கொஞ்சம் பணம் சம்பாதிக்க தொடங்கியவர் தன் 20 வயதிற்குள் குஜராத்தில் நன்கு பிரபலமடைந்த பாடகியாக மாறினார்.

புகழ்பெற்ற பாடல்

கீதா குஜராத்தி பாடலான ரோனா செர் மா என்ற தனது பாடலில் அறிமுகம் ஆனார். எக்லோ ரபாரி பாடலை பாடினார். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு கீதாவிற்கு அங்கீகாரம்பெற்று தந்தது.

குஜராத்தி பாடலை தவிர்த்து இவர் கர்பா ஆல்பம் ஒன்றில் பாடி உள்ளர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்