Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!
May 17, 2024, 05:47 PM IST
“Election 2024: பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் போல இந்தி தெரியாத இத்தாலியர் அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மண்ணின் மகன் என பா.ஜ.க வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் கூறி உள்ளார்”
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் போல இந்தி தெரியாத இத்தாலியர் அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மண்ணின் மகன் என பா.ஜ.க வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் கூறி உள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் போட்டியிடும் கங்கனா
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், இலாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
குலு மாவட்டத்தில் உள்ள ஜகத் கானாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ரணாவத், மோடி நல்லாட்சியின் சின்னம் என்றும், பிரதமருக்கு பஹாரி உட்பட பல மொழிகள் தெரியும் என்றும் கூறினார்.
மோடி, இந்தி தெரியாத இத்தாலியர் அல்ல!
பிரதமர் மோடி, சோனியா காந்தி போல் ஹிந்தி தெரியாத இத்தாலியர் அல்ல, மண்ணின் மகன், ஏழை குடும்பத்தில் பிறந்து, நாட்டின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார்.
ஜூன் 1ஆம் தேதி மக்கள் தயார்
ஒருபுறம், மோடியின் நல்லாட்சி இருக்கிறது. ஆனால் மறுபுறம், இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழலும் உள்ளது என்ற அவர், வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை உறுதி செய்ய தங்கள் மனதை உருவாக்கி உள்ளனர் என கங்கனா ரனாவத் பேசினார்.
காங்கிரஸ் கட்சிக்கு கங்கனா பதிலடி
இலாச்சல பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் ஜெய் ராம் தாக்கூர் தோல்வி படத்தைத் தயாரிக்கிறார் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கூறி இருந்த நிலையில், இதற்கு பதில் அளித்து பேசிய கங்கனா ரனாவத், ஜெய்ராம் தாக்கூர் முதல்வராக ஐந்தாண்டுகள் சூப்பர் ஹிட் அடித்தார், ஆனால் சுகு தனது பணியில் வெறும் 15 மாதங்களிலேயே தோல்வி அடைந்துவிட்டார் என தெரிவித்தார்.
இலச்சல பிரதேசத்தில் குடும்ப அரசியல்
6 முறை இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வராக இருந்த வீரபத்ர சிங் மற்றும் மாநில கட்சித் தலைவர் பிரதீபா சிங் ஆகியோரின் மகன் விக்ரமாதித்ய சிங், மண்டியின் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் ஆகியோரைப் பற்றி கேள்வி எழுப்பிய ரனாவத், தனது குடும்பம் நீண்ட காலமாக அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாக கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.
வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலும், மே 25ஆம் தேடி அன்று 6ஆம் கட்ட தேர்தலும், ஜூன் 1ஆம் தேதி அன்று 7ஆம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.