Sonia Gandhi: சோனியா காந்தி பிறந்தநாள்-பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
“திருமதி சோனியா காந்திஜியின் பிறந்தநாளில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் X இல் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரைத் தவிர, காங்கிரஸின் மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால், சசி தரூர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சோனியா, விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக இடைவிடாமல் வாதிட்டவர் என்று கார்கே கூறினார்.
“ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக இடைவிடாமல் குரல் கொடுத்தவர், அவர் தைரியம், துணிச்சல் மற்றும் தன்னலமற்ற தியாகத்துடன் துன்பங்களை எதிர்த்துப் போராடும் போது மிகுந்த கருணையின் அடையாளமாக திகழ்கிறார். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேணுகோபால் கூறுகையில், ‘சோனியா காந்தியின் பொது சேவை மற்றும் சமூகத்தின் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை பிரிவினரின் முன்னேற்றம் ஆகியவை கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளன. அவரது வாழ்க்கைப் பயணம் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் தரும். அவர் மிகவும் சவாலான காலகட்டத்தில் காங்கிரஸை மிகுந்த உறுதியுடன் வழிநடத்தினார், மேலும் அனைவரின் நலன் மற்றும் நாட்டிற்கான அதிவேக வளர்ச்சியை வழங்கிய UPA அரசாங்கத்தின் சிற்பி ஆவார், ”என்று அவர் கூறினார்.
அவர் காங்கிரஸை சிறந்த முறையில் வழிநடத்திச் சென்றதாகவும், அதன் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உத்வேகமாகத் தொடர்ந்து திகழ்வதாக சசி தரூர், சோனியா காந்தியைப் பாராட்டினார். "அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவித்து, எங்கள் கட்சியை வழிநடத்தி, நம் தேசத்திற்கு சேவை செய்யட்டும்" என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்து தெரிவித்தார். அவர், "எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான நமது ஒருங்கிணைந்த முயற்சியில் அவரது ஆழ்ந்த பார்வையும் அனுபவச் செல்வமும் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்