PM Modi: ’இனிதான் ஆட்டமே! வாரணாசி தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!’
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Pm Modi: ’இனிதான் ஆட்டமே! வாரணாசி தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!’

PM Modi: ’இனிதான் ஆட்டமே! வாரணாசி தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!’

Kathiravan V HT Tamil
May 13, 2024 09:53 PM IST

”வாரணாசி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, திங்கள்கிழமையான இன்று மாலை 6 கிலோமீட்டர் தூர சாலைப் பேரணியை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் அரவணைப்பும் பாசமும் நம்பமுடியாதது உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்”

’இனிதான் ஆட்டமே! வாரணாசி தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!’
’இனிதான் ஆட்டமே! வாரணாசி தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!’ (PTI)

வாரணாசி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, திங்கள்கிழமையான இன்று மாலை 6 கிலோமீட்டர் தூர சாலைப் பேரணியை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் அரவணைப்பும் பாசமும் நம்பமுடியாதது  உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். 

வாரணாசியில் தடுப்புகள் போடப்பட்ட சாலைகளில் மக்கள் வரிசையாக நின்றிருந்தனர், அவர்களில் சிலர் காவி கொடிகள், பலூன்கள் மற்றும் சிறிய "திரிசூலங்களை" பிடித்தபடி இருந்தனர். கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும் பாதையில் சிறிய மேடைகள் அமைக்கப்பட்டன. காசியைச் சேர்ந்த பிரபலங்களின் கட்அவுட்கள் பல இடங்களில் நிறுவப்பட்டன.

மராத்தி, குஜராத்தி, பெங்காலி, மகேஸ்வரி, மார்வாரி, தமிழ் மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கூடி 11 மண்டலங்களில் 100 இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.

வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள மாளவியா சௌராஹாவில் இருந்து ரோட்ஷோ தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, பிரதமர் காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்து பிரார்த்தனை செய்தார்.

சமூக வலைதளமான 'எக்ஸ்'-ல் ரோட்ஷோவின் வீடியோவையும் பகிர்ந்துள்ள மோடி, "காசி சிறப்பு வாய்ந்தது... இங்குள்ள மக்களின் அரவணைப்பும் பாசமும் நம்பமுடியாதது" என்று கூறினார்.

செவ்வாய் கிழமையான நாளைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யும் மோடியுடன் ஏராளமான மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள் வர உள்ளனர்.

லோக்சபா தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி போட்டியிடுகிறார்.

வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள மாளவியா சௌராஹாவில் உள்ள கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மோடி மாலை அணிவித்தவுடன் ரோட்ஷோ தொடங்கியது  

காவி உடையில் ஏராளமான பெண்கள் மோடி சென்ற வாகனத்திற்கு முன்னால் சென்றனர். பிரதமருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார். பாஜகவின் மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி உடன் இருந்தனர். இரவு BLW விருந்தினர் மாளிகையில் மோடி தங்குகிறார்.

செவ்வாய்க்கிழமை, கால பைரவர் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்வார்.

காலை 9 மணியளவில் கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் காட் பகுதியில் மோடி பிரார்த்தனை செய்யலாம் என்று லக்னோவில் வெளியிடப்பட்ட பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பயணத்திட்டத்தின்படி, பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக நகரத்தில் உள்ள நமோ காட் என்ற இடத்துக்கு பயணமாகலாம்.

வேட்புமனு தாக்கல் முடிந்ததும், ருத்ராக்ஷா மாநாட்டு மையத்தில் பாஜக தொண்டர்களுடன் மோடி சந்திப்பு நடத்துகிறார்.

செவ்வாய்க்கிழமை கங்கா சப்தமியை முன்னிட்டு பிரதமர் கங்கை நதியில் நீராடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியின் வேட்புமனு தாக்கலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான், அப்னா தளம் (எஸ்) தலைவர் அனுப்ரியா, சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதித்யநாத் தவிர, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹரியானா முதலமைசர் நயாப் சிங் சைனி, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், சிக்கி, முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா ஆகியோரும் பிரதமரின் வேட்புமனுத் தாக்கலில் கலந்துகொள்ள உள்ளனர்.

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.