தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Covid : கொரோனா அடுத்த இன்னிங்ஸ்? தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றாளர்கள் எண்ணிக்கை…

Covid : கொரோனா அடுத்த இன்னிங்ஸ்? தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றாளர்கள் எண்ணிக்கை…

Priyadarshini R HT Tamil

Mar 27, 2023, 01:37 PM IST

Corona Virus : இரண்டாவது நாளாக 1,800 புதிய கோவிட் தொற்றாளர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
Corona Virus : இரண்டாவது நாளாக 1,800 புதிய கோவிட் தொற்றாளர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Corona Virus : இரண்டாவது நாளாக 1,800 புதிய கோவிட் தொற்றாளர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

1,805 புதிய கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் உருவாகியுள்ளனர். இதையடுத்து கோவிட் தொற்றுடன் இருப்பவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. இது கோவிட் தொற்று நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதை காட்டுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Microsoft: ‘ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்’

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

ஹிமாச்சல பிரதேசத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கோவிட் – 19 தொற்று குறித்து அவர்கள் மாநிலத்தில் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது குறித்து அறிவுரை கூறி வருகிறார்கள். 

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இந்தியாவில் 1,800க்கும் மேற்ப்பட்ட தொற்றாளர்கள் உருவாகிறார்கள். இதனால், இந்தியாவில் ஆக்டிவாக உள்ள கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மத்திய சுகாதாரத்துறை திங்கட்கிழமை கொடுத்த தகவல்படி இந்த எண்ணிக்கை உள்ளது. 6 பேர் இறந்துள்ளார்கள் என்றும், இதையடுத்து நாட்டில் கோவிட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5,30,837 ஆக உயர்ந்தது. 

மாநில சுகாதார செயலாளர்கள் மற்றும் மூத்த அலுவலர்ளுடன், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று கலந்துரையாடுகிறார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு நாம் எவ்வளவு தயார் நிலையில் இருக்கிறோம் என்று அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள கோவிட் – 19 பாதுகாப்பு ஒத்திகை குறித்த விவரங்கள் இந்த கூட்டத்தில் வெளியிடப்படும். நாட்டில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் சுகாதார வசதிகள் எந்தளவில் உள்ளன என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.   

அரசு மற்றும் தனியார் ஆகிய அனைத்து மருத்துவமனைகளிலும், தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள் அனைத்தையும் போதியளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும. மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவற்றை மத்திய சுகாதார துறை மற்றும் இந்திய மருத்துச கவுன்சில் ஆகியவற்றின் அறிவுரைப்படி வைத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

உலக சுகாதாரத்துறை அறிவுறித்தல்படி, செய்யப்படவேண்டிய பரிசோதனைகளை செய்ய வேண்டும். ஆனால் கோவிட் பரிசோதனைகள் குறைவாக நடைபெறுகிறது. அவற்றை அதிகரித்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

எனவே மாநிலம் முழுவதும் தேவைப்படும் இடத்தில் பரிசோதனையை அதிகரித்தும், கோவிட் பரிசோதனைகளை மாநிலம் முழுவதும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறிப்பாக எங்கு பரவல், தொற்று அதிகம் உள்ளதோ அங்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பரவலை கட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும். 

சனிக்கிழமை இந்தியாவில், 1890 புதிய கொரோனா தொற்றுகள் உருவாகின. இது 149 நாட்களுக்கு பின்னர் பதிவான அதிக எண்ணிக்கை. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதுபிதுதள்ளது. தினமும் 1.56 சதவீதம் என்ற அளவில் பவல் உள்ளது. வாரத்தில் 1.29 சதவீதம் என்ற அளவில் பரவல் உள்ளது.

டாபிக்ஸ்