Chartered Accountants Day 2024: ஜூலை 1 ஏன் பட்டய கணக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம்
Aug 29, 2024, 11:56 AM IST
Chartered Accountants Day 2024: ஜூலை 1 ஏன் பட்டய கணக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்வோம்.
Chartered Accountants Day 2024: இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய பட்டய கணக்காளர்கள் தினம் அல்லது CA தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நிதி தணிக்கை மற்றும் கணக்கியல் தொழிலுக்கான ஒரே உரிமம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பு, இந்த பட்டயக் கணக்காளர்கள் தினத்தை கொண்டாடுகிறது.
ஜூலை 1 தேசிய பட்டய கணக்காளர் தினம்; இந்த நாளில்தான் 1949-ம் ஆண்டு Institute of Chartered Accountants of India (ICAI) உருவாக்கப்பட்டது. சுமார் 2.5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய கணக்கியல் நிறுவனமாக இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம் கருதப்படுகிறது.
இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனம்:
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் என்பது நாடாளுமன்றச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். நாட்டில் பட்டயக் கணக்காளர் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக பட்டயக் கணக்காளர்கள் சட்டம், 1949 (1949 ஆம் ஆண்டின் சட்டம் எண் XXXVIII) இந்த நிறுவனம், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
"இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம், உலகின் இரண்டாவது பெரிய பட்டய கணக்காளர்களின் தொழில்முறை அமைப்பாகும். இது பொது நலனுக்காக இந்திய பொருளாதாரத்திற்கு சேவை செய்வதில் வலுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது" என்று உரிய வலைத்தளம் கூறுகிறது.
முக்கியத்துவம்:
நாட்டின் நிதி வளர்ச்சியில் பட்டயக் கணக்காளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாள் ஜூலை 1 என குறிக்கப்படுகிறது. பட்டயக் கணக்காளர்கள் தணிக்கை, வரிவிதிப்பு, நிதி மற்றும் பொது மேலாண்மை உட்பட வணிகம் மற்றும் நிதியின் அனைத்து துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
வரலாறு
இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, பிரிட்டிஷ் அரசு இந்திய கம்பெனிகள் சட்டத்தின்கீழ் கணக்குகளை வைத்திருந்தது. அறிக்கைகளின்படி, பின்னர் 1930-ல், ’இந்திய அரசு கணக்காளர்கள் பதிவேடு’ என்று அழைக்கப்படும் ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இம்முறையின் கீழ், அத்தகைய பதிவேட்டில் யாருடைய பெயர் பதிவு செய்யப்பட்டதோ, அவர் பதிவு செய்யப்பட்ட கணக்காளர் என்று அழைக்கப்படுவார்.
இருப்பினும், சரியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இல்லாததால், கணக்கியல் தொழில் பெரும்பாலும் ஒழுங்குபடுத்தப்படாததாக அப்போது உணரப்பட்டது. இதைத் தீர்க்க, 1948ஆம் ஆண்டில், இந்த விஷயத்தை ஆராய ஒரு நிபுணர் குழு உருவாக்கப்பட்டது.
இந்த நிபுணர் குழுதான் கணக்காளர்களின் தொழிலை ஒழுங்குபடுத்த ஒரு தனி தன்னாட்சி பெற்ற கணக்காளர் சங்கத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1949ஆம் ஆண்டில், இந்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்று பட்டயக் கணக்காளர்கள் சட்டத்தை நிறைவேற்றியது.
இந்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இது இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) என்ற சட்டரீதியான அமைப்பை உருவாக்கியது.
பட்டய கணக்காளர்களின் பொறுப்புகள்:
ஒரு பிசினஸின் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கும், ஒரு பிசினஸின் நிதி நிலையையும், வணிக நடைமுறைகளைத் தணிக்கை செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை சேவைகளை தருவதற்கும் பட்டய கணக்காளர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
மேலும் செய்திகளுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்
டாபிக்ஸ்