தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Bjp Mla Son Has Lodged A Complaint Against Actress Taapsee At The Police Station

Actress Taapsee: நடிகை டாப்சி புண்படுத்தியுள்ளார் - எம்எல்ஏ மகன் புகார்

Mar 28, 2023, 11:13 PM IST

நடிகை டாப்சி மீது காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ மகன் புகார் அளித்துள்ளார்.
நடிகை டாப்சி மீது காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ மகன் புகார் அளித்துள்ளார்.

நடிகை டாப்சி மீது காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ மகன் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் டாப்சி. இவர் தமிழ் மொழியில் ஆடுகளம், காஞ்சனா, கேம் ஓவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Elon Musk arrives in China: இந்தியப் பயணத்தை ஒத்திவைத்த சில நாட்களில் சீனா சென்ற பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்!

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி வாக்கத்தான்

திண்ணை பள்ளியில் கல்வி.. தமிழ் எங்கள் மூச்சு.. தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்த உ.வே.சா..!

Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

பாலிவுட்டில் வெளியான பிங்க் என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. ஹிந்தி, தமிழ் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார். தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் ஜன கன மன என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஆடை அலங்கார அனுபவிப்பு நிகழ்ச்சி ஒன்று இவர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் நெக்லஸ் ஒன்று அணிந்திருந்தார். அந்த நெக்லஸில் மகாலட்சுமி மற்றும் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடவுள் உருவம் குறித்த நெக்லஸை கவர்ச்சி ஆடையில் எப்படி அணிந்து வரலாம் என சமூக வலைத்தளத்தில் பலர் அவருக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். அந்த நிகழ்ச்சியில் நடிகை டாப்சி அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன்கள் இந்து கடவுள்களையும் இந்து மதத்தையும் கடைப்பிடிக்கும் மக்களைப் புண்படுத்தும் உள்ளது.

மேலும் இது மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகக் கூறி பாஜக எம்எல்ஏ ஏக்லவ்யா கவுரின் மகன் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து தற்போது வரை வழக்குப் பதிவுகள் ஏதும் செய்யப்படவில்லை. அவரின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் காவல் நிலையத்தின் ஆய்வாளர் கபில் சர்மா தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்