தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ambedkar Statue Indias Tallest Ambedkar Statue Set To Inaugurate

Ambedkar Statue : இந்தியாவின் உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு

Priyadarshini R HT Tamil

Apr 14, 2023, 08:11 AM IST

Telangana CM : இந்த சிலை மட்டும்தான் இந்தியாவிலே மிக உயரமான சிலை என்று கூறப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் சிற்பிக்கு மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Telangana CM : இந்த சிலை மட்டும்தான் இந்தியாவிலே மிக உயரமான சிலை என்று கூறப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் சிற்பிக்கு மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Telangana CM : இந்த சிலை மட்டும்தான் இந்தியாவிலே மிக உயரமான சிலை என்று கூறப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் சிற்பிக்கு மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று 125 அடி உயர டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் சிலையை திறந்து வைக்கிறார். அவரது 132வது பிறந்த நாளில் ஹீசைன்சாகர் ஏரியின் கரையில் அது திறக்கப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Vistara: பைலட் பயிற்சியில் குறைபாடுகள்: விஸ்தாரா துணைத் தலைவரை இடைநீக்கம் செய்தது டிஜிசிஏ

Singapore Airlines: இந்திய தம்பதிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

NCR schools receive threats: டெல்லியில் குறைந்தது 50 பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல், உஷார் நிலையில் போலீஸார்

International Labour Day: தொழிலாளர் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

இந்த மிக உயர சிலை தெலங்கானா மாநிலத்தின் மற்றுமொரு அடையாளமாக இருக்கும். இந்தியா அரசியலமைப்பின் சிற்பிக்கு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலையாக இது இருக்கும். இதன் உயரம் 175 அடியாகும். 50 அடி உயர வட்ட அடிப்பாகத்துடன் அமைந்தது. அந்த அடிப்பாகத்தில் நாடாளுமன்றத்தை பிரதிபலிப்பதுபோன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

முதலமைச்சர் அலுவலக அதிகாரி கூறுகையில், சிலை 474 டன் எடை கொண்டது. இதில் 360 டன் உள்புற சிலையை அமைக்க ஸ்டெயின்லஸ் ஸ்டீல் அமைக்கப்பட்டது. பின்னர் மேற்புறத்தில் 114 டன் வெண்கல முலாம் பூசப்பட்டது.

இந்தச்சிலையை வடிவமைத்தவர்கள் சிற்பிகள் ராம் வஞ்சி சுதார் (98), அவரது மகன் அணில் ராம் சுதார் (65) ஆகியோர் ஆவர். இவர்கள் உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் ராம் சுதார் கலைக்கூடம் நடத்தி வருகிறார்கள். இந்தியாவின் புகழ் பெற்ற சிற்பக்கலைஞர்கள் ஆவார்கள். இவர்கள் நிறைய நினைவுச்சின்னங்களை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள்தான் குஜராத்தில் வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் 597 அடி உயர ஒற்றுமை சிலையை நிறுவியவர்கள். அது உலகிலேயே உயரமான சிலை ஆகும்.

இந்த சிலையை நிறுவுவதற்கான ஒட்டுமொத்த செலவு ரூ.146.50 கோடி ஆகும். இதற்கான ஒப்பந்தத்தை கேபிசி புராஜெக்ட்டஸ் போட்டிருந்தது. சிலை நிறுவப்பட்டுள்ள பீடித்தில் மூன்றுதளங்கள் உள்ளன. அவை மொத்தம் 26.258 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. அதில் அமைக்கப்பட்டுள்ள மியூசியத்தில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் புகைப்படங்கள், கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும். 100 பேர் அமரக்கூடிய ஆடிடோரியம் அமைக்கப்பட்டிருக்கும். அதில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு ஆடியோ-விசுவல் காட்சிகள் போட்டு காட்டப்படும். நூலகமும் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

மொத்தம் 11 ஏக்கர் நிலப்பரப்பில் 2.93 ஏக்கர் பசுமை பகுதியாகும். 450 கார்கள் நிறுத்த ஏதுவாக வாகன நிறுத்தம் அமைக்கப்படும். இரண்டு லிஃப்ட்கள் பீடத்தின் உச்சி, அதாவது அம்பேத்கர் சிலையின் பாதத்தை அடைவதற்கு அமைக்கப்படும்.

புதிதாக கட்டப்பட்ட தலைமைச்செயலகத்திற்கு அருகில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாக கட்டிடம் இம்மாதம் 30ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

டாபிக்ஸ்