Airtel 5G Plan: தடையில்லா, வரம்பற்ற 5ஜி சேவை பெறலாம்..ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கும் புதிய பூஸ்டர் பேக் - முழு விவரம்
Jul 20, 2024, 04:50 PM IST
4ஜி சேவையில், வரம்பற்ற 5ஜி சேவையை பெற பூஸ்டர் பேக்குகளை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் ஆட்ஆன் செய்வதன் மூலம் உங்கள் பிளான் வேலிடிட்டி காலத்தில் தடையற்ற 5ஜி சேவையை பெறலாம்.
இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியே சமீபத்தில் சேவை கட்டணங்களில் விலையேற்றம் செய்தது. இதைத்தொடர்ந்து போட்டி நிறுவனமான ஏர்டெல்லும் தன் பங்குக்கு ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டணத்தில் 20 சதவீதம் வரை விலையேற்றியது. இது வாடிக்கையாளர்கள் மத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விலையேற்றம் காரணமாக வேறு நெட்வோர்களுக்கு போர்ட் செய்து பலரும் மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சில ஸ்பெஷல் பிளான்களை தொலைதொடர்பு நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
இந்த பிளான்களில் வழக்கமான டாக்டைம், வேலிடிட்டி ஆகியவற்றுடன் சில கூடுதல் சேவைகளும் வழங்கப்படுகின்றன.
புதிய 5ஜி பூஸ்டர் பேக்குகள்
அதன்படி ஏர்டெல் நிறுவனம் வரம்பற்ற 5ஜி சேவையுடன் புதிய பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏர்டெல் புதிய பூஸ்டர் பேக்குகளாக அமைந்துள்ளது.
இதன் மூலம் 1GB/தினசரி மற்றும் 1.5GB/தினசரி திட்டங்களைக் கொண்ட பயனர்கள் அவற்றை வரம்பற்ற 5Gக்கு மேம்படுத்தலாம்.
வரம்பற்ற 5G தரவு நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெற தற்போதுள்ள பேக்குகளில் இந்த மலிவு விலை பூஸ்டர்களை செயல்படுத்தப்படலாம். இதுவொரு ஆட்ஆன் பேக்குகளாக இருப்பதால் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிளான்களில் இவை செயல்படும்.
இதன் விலையாக ரூ. 51, ரூ. 101, ரூ. 151 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் பேக் போடுவதற்கு முன் நாள்தோறும் 1 அல்லது 1.5GB டேட்டா திட்டங்களை கொண்டிருப்பவர்கள் அன்லிமிடெட் 5ஜி அணுகலை பெற இயலாது.
மேற்கூறிய விலைகளில் பூஸ்டர் பேக்குகள் ஆட்ஆன் செதால் ரூ. 51க்கு கூடுதலாக 3GB 4ஜி டேட்டா, ரூ. 101க்கு கூடுதலாக 6GB டேட்டா, ரூ. 151க்கு கூடுதலாக 9GB டேட்டாவும் பெறலாம்.
பயனாளர்கள் தற்போது நடைமுறையில் இருக்கு திட்டத்துடன் தடையற்ற அனுபவத்தை பெறலாம்.
இந்த பூஸ்டர் பேக் எப்படி வேலை செய்யும்?
உதாரணமாக ஒரு ரூ. 929 பிளானுக்கு ரிசார்ஜ் செய்திருந்தால் 90 நாள்கள் வேலிடிட்டியுடன் 1.5GB தினசரி 4ஜி டேட்டாக்களை பெறுவார். இவர் கூடுதலாக ரூ. 101 அன்லிமிடெட் 5ஜி பூஸ்டர் பிளான் ஆட்ஆன் செய்தால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை 5ஜி இணைப்பை பெறுவார். இதன் மூலம் வழக்கமான ரீசார்ஜுடன் விருப்பமான தொகையுடன் ஆட்ஆன் செய்து எளிதாக 5ஜி சேவையை பெறலாம்.
4ஜி பயனாளர்களுக்கான திட்டங்கள்
90 நாட்கள் லேலிடிட்டி, தினசரி 1.5GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் நன்மையை பெறும் விதமாக இரண்டு புதிய திட்டங்கள் 4ஜி பயனாளர்களுக்காக உள்ளன. அதன்படி ரூ. 929 செலுத்தி (மாதத்துக்கு ரூ. 310 என்ற கணக்கில்) வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தினசரி டேட்டா முடிந்ததும், டேட்டா வேகம் 64 கே.பி.பி.எஸ் வரை இருக்கும்.
கூடுதல் சேவையாக ஏர்டெல் ரிவார்ட்ஸ் அப்பல்லோ 24 |7Circle இல் 3 மாத சந்தா, இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் Wink இல் Wink Music ஆகியவையும் இதில் இடம்பிடித்துள்ளன.
77 நாள்கள் வேலிடிட்டி, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை ரூ. 799இல் பெறும் விதமாக மற்றொரு 4ஜி சேவை திட்டம் உள்ளது. இதனுடன் கூடுதல் சேவையாக ஏர்டெல் அப்பல்லோ 24 |7 வட்டம் 3 மாத சந்தா, விங்கில் இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் இசை ஆகியவை இடம்பிடித்துள்ளன.
இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் 5 ஜி இணையத்தைப் பெற மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்க, எனவே நீங்கள் 4 ஜி கைபேசிகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குறைந்த செலவில் நீண்ட கால திட்டத்தைத் தேடுகிறீர்களானால்,, அப்போது தான் இந்த இரண்டு திட்டங்களும் உங்களுக்கு சிறந்தவையாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்