தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  3 Crore Fraud Coimbatore Police Arrests Woman Who Was Absconding With Timmy

Kovai: 3 கோடி மோசடி-காவல்துறைக்கு டிமிக்கி குடுத்து தலைமறைவாக இருந்த பெண் கைது

Mar 12, 2023, 02:35 PM IST

நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கணபதியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cat accidentally sets house on fire: பூனையின் அட்டகாசத்தால் பற்றி எரிந்த வீடு.. ரூ.11 லட்சம் பொருட்கள் நாசம்

Russian woman: தனது டிக்கெட்டில் டெல்லி விமான நிலைய அதிகாரி தொலைபேசி எண்ணை எழுதியதாக ரஷ்ய பெண் புகார்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரம்..மன்னிப்பு கேட்ட ED..உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

International Sculpture Day 2024: சர்வதேச சிற்பக் கலை நாளின் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்

கோவை கணபதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34. இவரது மனைவி லலிதா இவருக்கு வயது 28. இந்த தம்பதி உள்பட மொத்தம் 7 பேர் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு கணபதி பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங் நடத்திவந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி தரப்படும் என்று ஆசை வார்த்தை காட்டினர்.

மேலும் ரூ.1லட்சம் முதலீடு செய்தால் 17.5 சதவீத வட்டியுடன் 100 நாட்கள் கழித்து ரூ.2 லட்சம் திரும்ப தரப்படும் என்றும், மற்றொரு திட்டத் தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 20 சதவீத வட்டியுடன் 12 மாதங்கள் கழித்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் திருப்பி தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவித்து பொதுமக்களின் ஆசையை தூண்டி விட்டனர்.

இதையடுத்து ஏராளமான மக்கள் இதில் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி முதலீட்டாளர்க ளுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோவை மாநகர காவல் துறையில் கடந்த 2020-ம் ஆண்டு புகார் அளித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் மோசடி புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை யில் அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.3 கோடி பணத்தை அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தலைமறை வாக இருந்த செந்தில்குமாரின் மனைவி லலிதாவை இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் லலிதாவை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

யி

டாபிக்ஸ்