ஒரு நிமிடத்திலே தயாரித்து விடலாம் தயிர் குழம்பு; பரபரப்பான நாளுக்கான ஹெல்தி ரெசிபி!
Dec 10, 2024, 01:01 PM IST
தயிர் கறி செய்வது எப்படி என்று பாருங்கள்.
அன்றாட உணவில் நாம் அதிகம் சேர்த்துக்கொள்ளும் உணவு வகைகளுள் ஒன்றுதான் தயிர். இதை தினமும் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு அதை சேர்த்துக்கொள்வதான் முக்கியத்துவத்தை உணர்த்தும். தயிர் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. தயிரைக்கடைந்து, வெண்ணெயை எடுத்துவிட்டு, மோராக்கி, அதில் நீரை அதிகம் சேர்த்து பருகினால் உடலின் சூட்டை தணிக்க உதவும் முக்கிய உணவாக இருக்கும். இந்த தயிரை கொழுப்பு சேர்த்து தயிராகவே எடுத்துக்கொள்வதும் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். தயிர் யோகர்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களின் குடோன் எனுமளவுக்கு சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக இதில் ப்ரோபயோடிக்குகள் அதிகம் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடல் எடை குறைக்க உதவுகிறது. பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே எண்ணற்ற நன்மைகளைக் கொண்ட தயிரை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். தயிரில் இருந்து நீங்கள் தயிர் குழம்பு என்ற எளிமையான ரெசிபியை செய்ய முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
தயிர் – ஒரு கப்
எண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தயிரை நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து கலந்து அனைத்தும் சூடானவுடன், அதை அப்படியே அடித்து வைத்துள்ள தயிரில் சேர்த்துவிடவேண்டும்.
அதில் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, பெரிய வெங்காயம் சேர்த்து கலந்துவிட்டால் நிமிடத்தில் தயாராகிவிடும் தயிர் குழம்பு. இதை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட சுவை அள்ளும்.
இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய், அப்பளம் இருந்தாலே போதும். உங்களுக்கு வேலை அதிகம் உள்ள ஒரு பரபரப்பான நாளில் இந்த தயிர் குழம்பை செய்து வைத்துவிட்டு, சாதம் மட்டும் வடித்துவிட்டு சென்று கொள்ளலாம்.
ஒருமுறை ருசித்தால் இதை மட்டுமே அடிக்கடி செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள் அத்தனை சுவையானது இந்த தயிர் குழம்பு. எனவே ஒருமுறை கட்டாயம் ருசித்துப் பாருங்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். தயிர் சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்