Top 6 Benefits of Curd : தினமும் ஒரு கப் தயிர்! உங்கள் உடலுக்கு கொண்டுவரும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
Top 6 Benefits of Curd : தினமும் ஒரு கப் தயிர்! உங்கள் உடலுக்கு கொண்டுவரும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

அன்றாட உணவில் நாம் அதிகம் சேர்த்துக்கொள்ளும் உணவு வகைகளுள் ஒன்றுதான் தயிர். இதை தினமும் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு அதை சேர்த்துக்கொள்வதான் முக்கியத்துவத்தை உணர்த்தும். தயிர் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. தயிரைக்கடைந்து, வெண்ணெயை எடுத்துவிட்டு, மோராக்கி, அதில் நீரை அதிகம் சேர்த்து பருகினால் உடலின் சூட்டை தணிக்க உதவும் முக்கிய உணவாக இருக்கும். இந்த தயிரை கொழுப்பு சேர்த்து தயிராகவே எடுத்துக்கொள்வதும் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். தயிர் யோகர்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களின் குடோன் எனுமளவுக்கு சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக இதில் ப்ரோபயோடிக்குகள் அதிகம் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
தயிரில் ப்ரோபயோடிக்குகள் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது. தயிருக்கு உங்கள் வயிற்றை குளுமையாக்கும் குணம் உள்ளது. இது உங்கள் செரிமான பிரச்னைகளை தீர்க்கிறது. உங்கள் உடலின் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. செரிமான கோளாறுகள் அல்லது அமில எதிர்ப்பு நோய் ஆகியவை ஏற்படாமல் காக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
உங்கள் உணவில் புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். அது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. தயிரில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது. இதனால் தேவையற்ற சாப்பிடும் உணர்வுகளைத்தடுத்து, நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது.