INTERNATIONAL DOGS DAY: ’சர்வதேச நாய்கள் தினம் இன்று!’ நாய்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களும் விழிப்புணர்வும்
Aug 26, 2024, 06:30 AM IST
International Dog Day: சர்வதேச நாய்கள் தினம், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 அன்று கொண்டாடப்படுகிறது. இது நம் வாழ்வில் மகிழ்ச்சி, தோழமை மற்றும் அன்பைக் கொண்டுவரும் விஸ்வாசம் நிறைந்து உள்ள உரோமம் கொண்ட நண்பர்களைக் கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள்.
ஆதிகாலம் தொட்டு நாய்களும் மனிதர்களும் ஒருவரையொருவர் நேர்மறையான தொடர்புகளை கொண்டு இருந்து உள்ளனர். ஆதி மனிதன் தனது வேட்டைக்கு உதவியாக நாய்களை பழக்கி பயன்படுத்தி உள்ளான். இதன் தொடர்ச்சி இன்றும் பல்வேறு இடங்களில் உள்ளது. நாய்கள் தங்கள் மனித நண்பர்களை ஆழமாக நேசிப்பது உடன் அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளன.
விலைமதிப்பற்ற பிணைப்பை ஏற்படுத்தும் நாள்
செல்லபிராணியான நாய்கள் நம்மீது காட்டும் அன்பானது நமது ஆன்மாவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச நாய் தினம் ஆனது மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே உள்ள இந்த விலைமதிப்பற்ற பிணைப்பை கொண்டாடும் நாளாக அமைந்து உள்ளது.
சர்வதேச நாய்கள் தினம், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 அன்று கொண்டாடப்படுகிறது. இது நம் வாழ்வில் மகிழ்ச்சி, தோழமை மற்றும் அன்பைக் கொண்டுவரும் விஸ்வாசம் நிறைந்து உள்ள உரோமம் கொண்ட நண்பர்களைக் கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள்.
சர்வதேச நாய்கள் தினத்தின் வரலாறு
2004 ஆம் ஆண்டு செல்லப்பிராணி மற்றும் குடும்ப வாழ்க்கை முறை நிபுணரானகொலீன் பைஜ் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியை சர்வதேச நாய் தினமாக கொண்டாட முடிவு செய்தார். விலங்கு மீட்பு வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்த பைஜ், பத்து வயதில் தனது செல்லபிராணியான ஷெல்டியை தத்தெடுத்த நாள் என்பதால் இந்த நாளை தேர்வு செய்தார்.
சர்வதேச நாய்கள் தினத்தின் குறிக்கோள்
தங்குமிடங்களில் இருந்து மீட்கப்பட வேண்டிய நாய்களின் எண்ணிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், செல்லப்பிராணிகளை வாங்குவதை விட தத்தெடுக்க மக்களை ஊக்குவிப்பதும் அவரது குறிக்கோளாக இருந்தது.
சுற்றுசூழல்களுக்கு ஏற்ப செல்லப்பிராணிகள் தேர்வு
இந்தியாவில் பரவலான காலநிலைகள் உள்ளன. நாய்களை நேசிப்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நாய் இனங்களை செல்லப்பிராணிகளாக தேர்வு செய்கிறார்கள், அவை இந்திய காலநிலைக்கு ஏற்றதாக இல்லை. வானிலை மாற்றங்கள் நாய்களை பாதிக்கின்றன. சில நாய் இனங்கள் கோடைகால சூழல்களுக்கு ஏற்றதாக உள்ளன. சில நாய்கள் குளிர் சூழலை விரும்புகின்றன. ஒரு செல்லப்பிராணியை வாங்கும் போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையைக் கருத்தில் கொள்வது முக்கியம்.
சர்வதேச நாய்கள் தின கொண்டாட்டம்
இந்த நாளைக் கொண்டாட உங்களிடம் செல்லப்பிராணியான நாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உணவு மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்காக அடிக்கடி போராடும் தெரு நாய்களுக்காக உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.
ஆதரவற்ற நாய்களுக்கு உதவுங்கள்
ஆதரவு அற்ற தெருநாய்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்குவது முதல் தடுப்பூசி போடுவதற்கு உதவுவது வரை அவர்களுக்காக உங்களால் நிறைய செய்ய முடியும். அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் கால்நடை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களை ஊக்குவிக்கவே இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.
சர்வதேச நாய்கள் தினத்தில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் இங்கே:
நாய்களுக்கு பிடித்த உணவுகளை கொடுத்து, அவர்களுடன் நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்ளுங்கள். இது அவர்களின் செயல்களுக்கு நன்றி தெரிவிக்க உதவும்.
ஆதரவற்ற நாய்களை தத்தெடுத்து அதன் வாழ்க்கையை மேம்படுத்த உதவுங்கள். நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், கருத்தடை செய்வதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாகும்.
டாபிக்ஸ்