தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்களுக்கு சிசேரியன் டெலிவரியா? விரைவில் மீண்டு வர கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்

உங்களுக்கு சிசேரியன் டெலிவரியா? விரைவில் மீண்டு வர கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்

Aarthi Balaji HT Tamil

Nov 02, 2024, 04:53 PM IST

google News
சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கர்ப்ப காலத்தில் ஒன்பது மாதங்களுக்கு, குழந்தைக்கு தாயின் உடலில் இருந்து மட்டுமே ஊட்டச்சத்து கிடைக்கும். பிரசவத்திற்குப் பிறகும், குழந்தையின் ஊட்டச்சத்து தேவை ஆறு மாதங்களுக்கு தாயின் பால் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த காரணத்திற்காகவே, கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு பெண்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுவும் சி - பிரிவு பிரசவம் என்றால் இன்னும் சற்று கூடுதல் கவனம் நம் உணவில் தேவைப்படுகிறது.

சிசேரியன் முறை

சி -பிரிவு பிரசவம் ஒரு அறுவை சிகிச்சை முறை கொண்டது. தாயின் வயிறு மற்றும் கருப்பையில் செய்யப்பட்ட கீறல் மூலம் பிரசவம் நடைபெறுகிறது. பிரசவத்தின் போது குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் சாதாரண பிரசவத்திற்கு பதிலாக சிசேரியன் செய்யப்படுகிறது. சி -பிரிவு காயம் குணமாக பிரசவித்த பெண் குறைந்தது 40 நாட்கள் ஒய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இப்படி இருக்கும் சூழ்நிலையில் சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு உணவு என்னவாக இருக்க வேண்டும்?

பருப்பு வகைகள், ஊறவைத்த சியா விதைகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை சி-பிரிவுக்குப் பிறகு உணவில் சேர்க்க வேண்டும். இது வலிமையைத் தருகிறது. மேலும், இந்த பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை போதுமான பால் உற்பத்தி செய்கின்றன.

புரதம் மற்றும் கால்சியம்

இது போன்ற புரதத்தை எடுத்து கொள்வது புதிய திசு செல்களை உருவாக்க உதவுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு திசுக்களை குணப்படுத்தவும் தசை சக்தியை மீட்டெடுக்கவும் புரதம் உதவுகிறது. கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை உருவாக்க உதவுகிறது மற்றும் இரத்த உறைதலைத் தடுக்கிறது. பருப்பு மற்றும் முட்டையில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.

பழங்கள்

சி -பிரிவுக்குப் பிறகு பல்வேறு பழங்களையும் உணவில் சேர்க்க வேண்டும். ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. பப்பாளியில் உள்ள என்சைம்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

பாதாம்

பாதாம் பருப்பில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் பி12, ஈ, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்து உள்ளது. இதை பால் அல்லது நீங்கள் உண்ணும் எந்த உணவுகளிலும் சேர்க்கலாம். தாய் பால் கொடுப்பவர்களுக்கு பாதாம் பருப்பு சிறந்த சிற்றுண்டியாக கூட இருக்கும்.

தண்ணீர்

தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் உங்கள் பால் உற்பத்தி மற்றும் ஆற்றல் மட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ள ஹைட்ரேட் செய்ய வேண்டும்.

அதனால் முடிந்த அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். காஃபின் கலந்த பானங்களை குறைக்கவும், ஏனெனில் அவை குழந்தைக்கு தூக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுக்கும் முன்பாக ஒரு டம்பளர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை