C - Section Birth : சிசேரியன் செய்த பெண்களா நீங்கள்? அதில் உள்ள ஆபத்தை பாருங்க! அதிர்ச்சி ஆய்வு முடிவு!
C - Section Birth : Are you a woman who had a caesarean section? Look at the danger in it! Shocking study results!
அறுவைசிகிச்சைக்குப் பின் உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு தோலில் கிருமித்தொற்று அதிகம் ஏற்படுகிறது என ஹைதராபாத் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஹைதராபாத்தில் செய்த ஆய்வில், சிசேரியன் அறுவைசிகிச்சைக்குப்பின், இளம்பெண்கள், உடல் பருமனான பெண்கள் (Obese) மத்தியில் தோலில் (அறுவைசிகிச்சைக்காக தோலில் தையல் போட்ட இடத்தில்) கிருமித்தொற்று அதிகம் ஏற்படுவது ஹைதராபாத் ஆய்வில் கண்டறியப்பட்டு,"Prospective Cohort Study of Surgical Site Infections (SSI) following Single-dose Antibiotic Prophylaxis in Caesarian Section at a Tertiary care Teaching hospital in Medchal"-"PLOS One-January-மருத்துவ ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
ஆய்வில் மொத்தம் 2,015 பேர் கலந்து கொண்டனர். இவர்களின சராசரி வயது 24ஆக இருந்தது.
ஆய்வில் கலந்துகொண்ட 4.6 சதவீதம் பேருக்கு தோலில் தையல் போட்ட இடத்தில் (Surgical Site Infections-SSI) கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 99 சதவீதம் பேருக்கு மேலோட்டமான கிருமித்தொற்றும் (Superficial Infections) - 92 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு, அதில் 91 பேருக்கு மேலோட்டமான கிருமித்தொற்றும்,1 நபருக்கு ஆழமான (Deep) கிருமித்தொற்றும் ஏற்பட்டுள்ளது.
இதில் 84 பேருக்கு மருத்துவமனையில் இருக்கும்போதும், 8 பேருக்கு வீட்டிற்குச் சென்ற பின்னரும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அறுவைசிகிச்சை செய்து 30 நாட்கள் வரை கிருமித்தொற்று அளவிடப்பட்டது.
இதில், இளம் பெண்களுக்கு - 25 வயதிற்கு கீழானவர்கள் - 2.3
உடல் பருமனான பெண்கள் - 2.5
என அதிகமாக கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. (Adjusted relative risk for developing an Infection-SSI).
அறுவைசிகிச்சை தொடங்க 30 நிமிடம் ஒரு மணி முன்னர் ஒரே ஒருமுறை கிருமித்தொற்றைத் தவிர்க்க cephazolin அல்லது Cefotaxime கிருமிகொல்லி பயன்படுத்தப்பட்டது.
உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு சிசேரியன் அறுவைசிகிச்சைக்குப் பின் கிருமித்தொற்று அதிகம் ஏற்படுவது பல உலக ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் கர்ப்ப காலத்தில் உடல் எடையை சீராக இருப்பதை உறுதிசெய்தால் மட்டுமே அறுவைசிகிச்சைக்குப் பின் கிறுமித்தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். ஒருவேளை அதிக கிருமிகொல்லியின் பயன்பாடு (Higher dose of Antibiotic) கிருமித்தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.
கிருமித்தொற்றுக்கு Staphylococcus aureus முக்கிய கிருமியாகவும், Klebsiella மற்றும் E.coli கிருமிகளும், கிருமித்தொற்று ஏற்பட பிற காரணிகளாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, தேவையற்று சிசேரியன் அறுவைசிகிச்சை செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
பெங்களூரு IISc யில் கிருமிகொல்லிக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகளை (Staphylococcus, E.coli, Klebsiella உட்பட) “Illuminate Fluorescense Reader" மூலம் 2 மணி நேரத்திற்குள் கண்டறிந்து உடனே உரிய சிகிச்சையை தொடங்க வழிவகை செய்துள்ள செய்தி ACS Sensors Journalல் வெளிவந்துள்ளது.
Fluorescent hydrogel Matrixல் பச்சை ஒளி மிளிர்ந்தால் கிருமிகொல்லிக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமி இருப்பதை உறுதிசெய்ய முடியும்.இது விலையும் மலிவானது.
அறிவியல் தீர்வுகளை அரசு மருத்துவமனைகளில் கொண்டுவர மக்கள் நலன் கருதி அரசுகள் முன்வர வேண்டும்.
மருத்துவர் புகழேந்தி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்